பொதிகை எக்ஸ்பிரஸ்-பயணிகளை குழப்பும் தாம்பரம் ரயில் நிலையம்
நெல்லை: சென்னையிலிருந்து செங்கோட்டை வரை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் தென்காசி வரை மட்டுமே செல்வதாக அறிவித்து தாம்பரம் ரயில் நிலையம் மக்களை குழப்பி வருகிறது. இந்த தவறான தகவலால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2003, ஜூன் 1ம் தேதி முதல் பொதிகை எக்ஸ்பிரஸ் சென்னை முதல் ராஜபாளையம் வரையில் பிராட்கேஜ் பாதையில் இயக்கப்பட்டு வந்தது. பின்னர் அது தென்காசி வரை நீட்டிக்கப்பட்டது.
கடந்த 2008 பிப்ரவரி 7ம் தேதி முதல் அந்த ரயில் செங்கோட்டை வரை மேலும் நீட்டிக்கப்பட்டது. தற்போது அது தினமும் ஒரு முறை செங்கோட்டையிலிருந்து, சென்னை எழும்பூருக்கும், சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கும் இயக்கப்படுகிறது.
இந்த ரயில்தான் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை வரையுள்ள மக்களின் கதாநாயகன்.
இந்த ரயில் செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டு 16 மாதங்களை கடந்த நிலையிலும் தாம்பரம் ரயில் நிலையத்தில் இந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து தென்காசி வரை மட்டுமே செல்வதாக தவறாக அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த தவறான அறிவிப்பினால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் பெரும் குழப்பம் அடைந்துள்ளனர். தென்னக ரயில்வே அதிகாரிகள் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு குழப்பத்தை தவிர்க்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கவனிக்குமா தென்னக ரயில்வே...
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications