இலங்கை: விரைவில் அனைத்து கட்சி கூட்டம்?

ராஜ்யசபாவில் கடந்த 2 நாட்களாக இலங்கைப் பிரச்சினை குறித்து பல்வேறு கட்சி எம்.பிக்களும் உணர்ச்சி மயமாக பேசி வருகின்றனர்.
இன்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான வெங்கையா நாயுடு பேசுகையில், இலங்கையிலிருந்து வெளி வரும் தகவல்கள் மிகவும் அதிர்ச்சிகரமாக உள்ளன. அங்கு இனப்படுகொலைக்கு சற்றும் குறைவில்லாமல் படுகொலை நடந்து வருகிறது.
சர்வதேச சமுதாயம் ஈழத் தமிழ் மக்களைக் காக்கத் தவறி விட்டது. பிரதமர் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றைக் கூட்டி இந்த விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும் என்றார்.
அதிமுக உறுப்பினர் மைத்ரேயன், சிபிஐ உருப்பினர் ராஜா, சிபிஎம் உறுப்பினர் பிருந்தா காரத் மற்றும் சில இடதுசாரி எம்.பிக்களும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என வலியுறுத்தினர்.
இலங்கைத் தமிழர்களின் நலன்களைக் காக்க இந்திய அரசுக்கு முழு உரிமை உள்ளது, தார்மீக உரிமை உள்ளது என்று இவர்கள் வலியுறுத்தினர்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி.ஜே. குரியன், சந்தோஷ் பகோர்டியா ஆகியோரும் இந்த பிரச்சினையில் தங்களை இணைத்துக் கொண்டு பேசினர். இலங்கையில் அப்பாவி மக்களைக் காக்க இலங்கை அரசுடன் இந்திய அரசு பேச வேண்டும் என வலியுறுத்தினர்.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications