எம்பிபிஎஸ்-இதுவரை 14000 விண்ணப்பங்கள் விற்பனை
சென்னை: தமிழகத்தில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர முதல் 5 நாட்களிலேயே 14,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விற்பனையாகி உள்ளன.
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, சேலம், கோவை, திருநெல்வேலி, தர்மபுரி உள்ளிட்ட 15 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,483 எம்பிபிஎஸ் இடங்களுக்கும்,
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட நான்கு சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள 251 எம்பிபிஎஸ் இடங்களுக்கும்,
சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 85 பிடிஎஸ் (பல் மருத்துவம்) இடங்களுக்கும் உள்ளன.
இந்த இடங்களில் சேர கடந்த ஆண்டு மொத்தம் 12,732 விண்ணப்பங்களே மாணவர்களால் வாங்கப்பட்டன. ஆனால், இந்த ஆண்டு முதல் 5 நாட்களிலேயே 14,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விற்கப்பட்டுவிட்டன. இன்னும் 8 நாட்கள் விண்ணப்பங்கள் விற்கப்படவுள்ளன. இதனால் விண்ணப்பிப்போர் எண்ணிக்கை 20,000த்தைத் தாண்டிவிடும் என்று தெரிகிறது.
விண்ணப்பங்களைப் பெறவும் சமர்ப்பிக்கவும் கடைசி நாள் வரும் ஜூன் 17ம் தேதியாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலக தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும்.
தேர்வுக் குழுவுக்கு இதுவரை மொத்தம் 1,500 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளன.
இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் கணிதத்தில் அதிக மாணவர்கள் 200க்கு 200 வாங்கியுள்ளனர். அதேபோல மருத்துவத்துக்கான ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண்ணுக்குரிய முக்கியப் பாடங்களான உயிரியல், வேதியியல் ஆகியவற்றில் அதிக மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
இதனால் எம்பிபிஎஸ், பிடிஎஸ்சி்ல் சேர கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
பிஇ படிப்பில் சேர மொத்தம் 1.60 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications