12 பேருடன் இந்திய விமானப்படை விமானம் மாயம்
ஷில்லாங்: இந்திய விமானப்படை விமானம் ஒன்று நடுவானில் திடீரென மாயமாகி விட்டது. அதில் 12 பேர் இருந்தனர். விமானம் மலையில் மோதியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
விமானப்படைக்குச் சொந்தமான ஏ.என்.32 ரக விமானம் வீரர்களையும், பொருட்களையும் எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நேற்று அஸ்ஸாம் மாநிலம் மோகன்பாரி என்ற இடத்தில் உள்ள விமான தளத்திலிருந்து கிளம்பியது. அப்போது அதில் விமானப்படை அதிகாரிகள், விமானிகள் என மொத்தம் 6 பேர் இருந்தனர்.
விமானம் அருணாச்சல் பிரதேசத்தில் உள்ள மெச்சுகா என்ற இடத்தில் இறங்கியது. அங்கு மேலும் 6 பேரை ஏற்றிக் கொண்ட ஜோர்ஹாட் கிளம்பியது.
அதன் பிறகு விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து வி்மானத்தைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மேலும் விமானம் வந்த பகுதி அடர்ந்த காடுகள் அடங்கியதாகும். எனவ காட்டுக்குள் விமானம் விழுந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
அடர்ந்த காட்டுப் பகுதியாக இருப்பதால் தேடுதல் முயற்சிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications