விருதுநகர் அருகே 2 தலித் சிறார்கள் படுகொலை
விருதுநகர்: விருதுநகர் அருகே 2 பள்ளிக்கூடச் சிறுவர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். முன்விரோதம் காரணமாக இந்த சிறுவர்களைக் கொலை செய்து விட்டனர். இருவரும் தலித் வகுப்பினர் என்பதால் பரபரப்பு நிலவுகிறது.
விருதுநகர் அருகே உள்ள கன்னிச்சேரியைச் சேர்ந்தவர் பீட்டர். இவர் கம்மநாயக்கன்பட்டி தலையாரி ஆவார். இவருக்கு அந்தோணி ராஜ் என்கிற ராஜா என்ற 14 வயது மகன் இருந்தார். இவன் அம்மாபட்டியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.
பீட்டர் வீட்டுக்கு அருகில் வசித்து வருபவர் புஷ்பராஜ்.
புகைப்பட ஸ்டூடியோ வைத்துள்ளார். இவருடைய மகன் சிமியோன் (12). இவனும் ராஜா படித்து வந்த பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்த பின்பு டியூசனுக்கு சென்று படித்து விட்டு இரவு 7 மணி அளவில் இரு சிறுவர்களும் வீடு திரும்பினர்.
தினசரி இரவு சிறிது நேரம் இருவரும் விளையாடப் போவது வழக்கம். அதேபோல அன்றும் இரவு 8 மணியளவில் விளையாடக் கிளம்பினர்.
ஆனால் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து இரு வீட்டு பெற்றோரும் அக்கம் பக்கத்தினரும் தேடிப் பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை.
இதையடுத்து வச்சக்காரப்பட்டி போலீஸில் புகார் தரப்பட்டது. இந்த நிலையில், நேற்று அதிகாலையில், கிராமத்திற்கு வெளியே உள்ள சுண்ணாம்பு காளவாசல் பகுதியில் இரு சிறுவர்களும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தது தெரிய வந்தது.
சிறுவர்களின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது. தலையிலும் ரத்தக் காயம் உள்ளது. சிறார்கள் இருவரும் கொடூரமாகக் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கன்னிசேரிக்குப் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விரைந்து வந்த எஸ்.பி. செந்தில்குமார் மக்களை அமைதிப்படுத்தினார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications