காவல் அதிகாரிகளை மிரட்டியதாக ஜெ., வைகோ மீது தொடரப்பட்ட வழக்கு டிஸ்மிஸ்
மதுரை: காவல்துறை அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசியதாக கூறி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோருக்கு எதிராக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடியானது.
மதுரை அன்புநகரை சேர்ந்த பாண்டித்துரை என்ற வக்கீல், மதுரை 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், கடந்த 7.10.2006 அன்று மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா, போலீசார் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர் என்றும், நான் ஆட்சிக்கு வந்தால் போலீஸ் அதிகாரிகளை சும்மா விட மாட்டேன், இதை போலீசாருக்கு எச்சரிக்கையாக கூறுகிறேன் என்றும் பேசி உள்ளார்.
இந்த பேச்சு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், அரசுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையிலும் உள்ளது.
அதே போன்று நெல்லையில் 9.10.2006 அன்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, போலீசாரை மிரட்டும் வகையில் பேசி உள்ளார். எனவே அவர்கள் 2 பேர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை ஜூடிசியல் கோர்ட் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து பாண்டித்துரை உயர்நீதிமன்றக் கிளையில் அப்பீல் செய்தார்.
இருப்பினும் இந்த வழக்கில் தொடர்ந்து அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில், நேற்று நீதிபதி ஏ.செல்வம் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
ஜெயலலிதா சார்பில் வக்கீல்கள் நவநீதகிருஷ்ணன், தமிழ்செல்வன், காடுபட்டி கருணாகரன் ஆகியோர் ஆஜரானார்கள். வைகோ சார்பில் மூத்த வக்கீல் செல்லப்பாண்டியன், ம.தி.மு.க வக்கீல் சுப்பாராஜ் ஆஜராகினர்.
மனுதாரர் தரப்பில் தொடர்ந்து 3-வது முறையாக வக்கீல்கள் யாரும் ஆஜராகவில்லை. இதை தொடர்ந்து அந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications