நீதிமன்றத்தில் சாமிக்கு எதிராக வக்கீல்கள் கோஷம்
மதுரை: மதுரை உயர்நீதிமன்றக் கிளைக்கு வந்த ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சாமிக்கு எதிராக வக்கீல்கள் திரண்டு வந்து கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை பி.பி. குளத்தில் உள்ள ஜனதா கட்சி அலுவலகம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மர்ம நபர்களால் தாக்கப்பட்டது. இதுகுறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்ற வேண்டும் என்று கோரி சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இது ஒரு புறம் இருக்க, சென்னை உயர்நீதிமன்றத்தில் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களுக்கு ஆதரவாக மனு செய்ய சாமி வந்தபோது வக்கீல்கள் அவரை முட்டையை வீசித் தாக்கினர். முதுகிலும் அடித்தனர்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட வக்கீல்களை போலீஸார் கைது செய்ய முயன்றபோது வரலாறு காணாத கலவரம் ஏற்பட்டது.
இதையடுத்து ஜனதாக் கட்சி அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி சாமி தாக்கல் செய்த மனுவை மதுரை உயர்நீதிமன்றக் கிளைக்கு உயர்நீதிமன்ற சென்னை முதன்மை பெஞ்ச் மாற்றி உத்தரவிட்டது.
இந்த வழக்கிலும் சாமி நேரில் ஆஜராக முடியாத நிலை இருந்தது. காரணம், மதுரையிலும் வக்கீல்கள் தன்னை தாக்கி விடுவார்களோ என்ற சாமியின் அச்சத்தால்.
இந்த நிலையில் நேற்று அந்த வழக்கு நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சாமி நேரில் ஆஜராகி வாதாடினார்.
விசாரணைக்குப் பின்னர், இந்த வழக்கில் இதுவரை போலீசார் எடுத்த நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும், விசாரணையை வருகிற 22ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
விசாரணை முடிந்ததைத் தொடர்ந்து சாமி வெளியே வந்தார். அப்போது அங்கு திரண்டு நின்று காத்திருந்த வக்கீல்கள் சாமிக்கு எதிராக ஆவேசமாக கோஷமிட்டனர்.
சிங்கள அரசுக்கு ஆதரவாக செயல்படும் சுப்பிரமணிய சாமியே நீதிமன்றத்தை விட்டு வெளியேறு என்று முழங்கினர். தொடர்ந்து அவர்கள் கோஷமிட்டபடி சாமியை பின் தொடர்ந்து வந்தனர். இதனால் சாமியைத் தாக்கப் போகிறார்களோ என்ற பரபரப்பு நிலவியது.
இருப்பினும் அதுபோல எதுவும் நடக்காமல் தப்பினார் சாமி. பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
என் மீது முட்டை வீசிய வக்கீல்களை பார் கவுன்சிலில் இருந்து நீக்க வேண்டும் என்றும், அந்த சம்பவத்தில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவர்களை கல்லூரியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் தனியாக ஒரு மனு தாக்கல் செய்ய உள்ளேன்.
பொதுமக்களுக்கு சேவை செய்யவே வக்கீல்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் முட்டை வீச்சு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு தங்களை அவமானப்படுத்துகின்றனர்.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் மூலம் 2 விஷயங்கள் தெளிவாகின்றன. வக்கீல்கள் மீது போலீசார் எடுத்த நடவடிக்கைக்கு 84 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
பின்னர் பேட்டியை தனது ஸ்டைலில், கருணாநிதிக்கு இலங்கை தமிழர்கள் மீது எந்த அக்கறையும் இல்லை. இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை அளிப்போம் என்று ராஜபக்சே அளித்த உறுதிமொழியை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கும்படி அமெரிக்கா,சீனா, இஸ்ரேல் நாட்டு அதிபர்களை சந்தித்து வலியுறுத்துவேன் என்று முடித்தார் சாமி.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications