பாஜகவில் பெரும் சிக்கல் - யஷ்வந்த் சின்ஹா ராஜினாமா
டெல்லி: பாஜக துணை தலைவர் யஷ்வந்த் சின்ஹா தனது துணைத் தலைவர் பதவி உள்ளிட்ட கட்சியில் வகித்து வந்த அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்வதாக அறிவி்த்துள்ளார்.
சின்ஹாவின் இந்த விலகலால் பாஜகவில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து பாஜகவில் பயங்கர குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. தேர்தல் தோல்வி தொடர்பாக மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நாடாளுமன்ற பாஜக நிர்வாகிகள் நியமனம் அங்கு பெரும் புயலைக் கிளப்பி விட்டது. மூத்த தலைவரான ஜஸ்வந்த் சிங், ராஜ்யசபா துணைத் தலைவராக அருண் ஜேட்லியை நியமித்ததற்கு பகிரங்க ஆட்சேபனை தெரிவித்திருந்தார்.
அதேபோல மக்களவை துணைத் தலைவர் பதவியை சுஷ்மா சுவராஜுக்கு கொடுத்ததையும் ஜஸ்வந்த் சிங் பகிரமாக விமர்சித்திருந்தார்.
இவரது கருத்துக்கு மூத்த தலைவரான யஷ்வந்த் சின்ஹாவும் ஆதரவு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பாஜக துணை தலைவர் யஷ்வந்த் சின்ஹா தனது துணைத் தலைவர் பதவி, செயற்குழு உறுப்பினர் பதவி உள்ளிட்டவற்றை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இது அனைத்தையும் விரிவாக தெரிவித்து அவர் கட்சி தலைவர் ராஜ்நாத் சிங்கிற்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.
வாஜ்பாய் ஆட்சியில் நிதியமைச்சராகவும், வெளியுறவு அமைச்சராகவும் இருந்தவர் சின்ஹா என்பது குறிப்பிடத்தக்கது.
சின்ஹாவின் விலகலால் பாஜகவில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications