கருணாநிதி தலைமையில் 16ம் தேதி திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்
சென்னை: முதல்வர் கருணாநிதி தலைமையில், வருகிற 16ம் தேதி திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம், திமுக இளைஞர் அணித் தலைமையகமான அன்பகம், அண்ணா மன்றத்தில் நடைபெறுகிறது.
தமிழக சட்டசபையின் நீடிக்கப்பட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற 17ம் தேதி தொடங்குகிறது. பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பிறகு நடக்கும் முதல் கூட்டத்தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு தலைமை கொறடா அர.சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் கருணாநிதி தலைமையில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 16-6-2009 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு சென்னை அண்ணாசாலை, அன்பகத்தில் உள்ள அண்ணா மன்றத்தில் நடைபெறும்.
தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.
முதல் முறையாக அன்பகத்தில்..
வழக்கமாக திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும். ஆனால் முதல் முறையாக அன்பகம், அண்ணா மன்றத்தில் அது நடைபெறவுள்ளது.
அன்பகம்தான் திமுக இளைஞர் அணியின் தலைமையகமாகும். இளைஞர் அணியின் செயலாளராக உள்ள மு.க.ஸ்டாலின் தற்போது துணை முதல்வராகியுள்ளார்.
துணை முதல்வரான பின்னர் நடைபெறும் முதல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் அன்பகத்தில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
-
Rajiv Gandhi: செந்தில் பாலாஜியிடமே முறைத்து கொண்ட ராஜீவ் காந்தி? பதவி மாற்றத்திற்கு இதுதான் காரணமா? -
10 மாவட்டத்தில் திமுகவுக்கு ரெட் சிக்னல்.. கொங்கு நிலவரத்தால் சோகத்தில் அறிவாலயம்.. ஸ்டாலின் முடிவு! -
ஸ்டாலினா? எடப்பாடியா? விஜய்யா? நகர்ப்புறங்களில் யாருக்கு வாக்கு அதிகம்! வெளியான கருத்துக்கணிப்பு -
DMK Alliance: 42/234! இதுவரை திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு? -
மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு.. கடந்த தேர்தலை விட குறைக்கப்பட்டது ஏன்? பின்னணியில் துரை வைகோ! -
18-ஆ? 25-ஆ காங்கிரஸுக்கு? அப்ப அதிமுக 210, திமுக 200 சீட்? சென்னை டூ கன்னியாகுமரி வரை திடீர் சேஞ்ச்? -
அடேங்கப்பா.. இது லிஸ்டுலேயே இல்லையே.. ஸ்டாலின் எடுத்த முடிவு.. மிக முக்கிய எம்எல்ஏவிற்கு நோ சீட்? -
+2 மாணவி கொலை சம்பவம்.. 2 நாட்களாக போராடுகிறோம்.. உடனே ஏன் வரலை.. கனிமொழியை கேட்ட உறவினர்கள்! -
அரசியல் வரலாறு: உலகத் தமிழ் மாநாட்டில் ஊழல்? அண்ணா மீது புகார்! சட்டசபையில் நடந்த காரசார விவாதம்! -
2026 சட்டமன்றத் தேர்தல்: 'தொண்டை கட்டியிருக்கு...' - கனிமொழியின் அந்தப் பதில்! என்னதான் நடக்கிறது? -
ஆள் பார்த்து போடுங்க.. இப்பவே உள்ளடி வேலை கையை மீறி போகுதே.. ஸ்டாலினுக்கு இதெல்லாம் தெரியுமா? -
வருகிறார் மாஸ்டர்மைண்ட்.. டெல்லி களமிறக்கும் ஐபிஎஸ்.. சரியாக தமிழக தேர்தல் நேரத்தில் பயங்கர பிளான்!











Click it and Unblock the Notifications