பாஸ்போர்ட்-நெல்லையில் போலி் சான்றிதழ் கொடுத்த இருவர் கைது
நெல்லை: போலி ஆவணங்கள் கொடுத்து பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்த நெல்லையை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு போலி சான்றிதழ் வழங்கியவரை தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்தவர்கள் சாகுல் அமீது பாதுஷா (22), ரசூல் சாகுல் அமீது(34). இவர்கள் இருவரும் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வதற்காக பாஸ்போர்ட் கேட்டு மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்தனர்.
இதில் மேலப்பாளையம் நகராட்சி அலுவலகம் கொடுத்ததாக கூறி பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை கொடுத்தனர். ஆனால், அந்த சான்றிதழ் குறித்து பாஸ்போர்ட் அலுவலருக்கு சந்தேகம் ஏற்படவே, அவர் நெல்லை போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார்.
இதனையடுத்து அந்த பிறப்புச் சான்றிதழ்கள் குறித்து பாளை போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் சாகுல் அமீது பிறப்புச்சான்றிதழில் இல்லாத பாதுஷா என்ற பெயரை சேர்த்து விண்ணப்பித்ததும், ரசூலும் இதே போல சில திருத்தங்கள் செய்து போலியான சான்றிதழ் தயாரித்ததும் தெரிய வந்தது.
இதனையடு்த்து அவர்கள் இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு சான்றிதழ் தயாரித்து கொடுத்த நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications