போனால் போகட்டுமென கால் சதவிகித வட்டி குறைப்பு செய்த எஸ்பீஐ!
டெல்லி: வங்கிகள் பெருமளவு வட்டிக் குறைப்பைச் செய்து, நாட்டின் அனைத்துத் தரப்புக்கும் எளிய வட்டியில் கடன் தர முன்வர வேண்டும் என இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கேட்டுக் கொண்டதையடுத்து, பாரத ஸ்டேட் வங்கி கால் சதவிகித வட்டிக் குறைப்பை அறிவித்துள்ளது!
மத்திய நிதியமைச்சர் சொன்னதில் 20-ல் ஒரு மடங்கு கூட இந்த வட்டிக் குறைப்பு இல்லை என்பதும், ஒப்புக்கு இந்த அறிவிப்பை பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனவரியிலிருந்து 5 முறை இந்திய ரிசர்வ் வங்கி பலவித நிதிச் சலுகைகளை வட்டிக் குறைப்பு மூலம் அறிவித்திருந்தது. ஆனால் வணிக வங்கிகள் இதை முறையாக கடைப்பிடிக்கவில்லை. இதனால் ரிசர்வ் வங்கியின் சலுகைகள் வணிக வங்கிகளைத் தாண்டிச் செல்லவே இல்லை.
இதனைக் கருத்தில் கொண்டு மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, உடனடியாக வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கியின் நெறிமுறைகளின் படி வட்டிக் குறைப்பைச் செய்து, பொருளாதார வளர்ச்சிக்குத் துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஆனால் அப்படியும் வணிக வங்கிகள் திருந்துவதற்கான அறிகுறியே இல்லை.
ரிசர்வ் வங்கி இதுவரை 6 சதவிகிதத்துக்கும் அதிகமான வட்டிக் குறைப்பை நடைமுறைப்படுத்திவிட்டது. ஆனால் இந்தியாவின் முன்னணி வங்கி என்ற பெருமையைச் சுமந்து கொண்டுள்ள பாரத ஸ்டேட் வங்கி 1.75 சதவிகிதம் வரைதான் இதுவரை வட்டிக் குறைப்பு செய்துள்ளது. அதைக் கூட 6 முறை இன்ஸ்டால்மெண்டில்தான் செய்திருக்கிறது.
பிரணாப் முகர்ஜியே வேண்டுகோள் விடுத்த பிறகு, இப்போது ஸ்டேட் வங்கி அறிவித்துள்ள வட்டிக் குறைப்பு எவ்வளவுதெரியுமா... ஜஸ்ட் 0.25 சதவிகிதம்... அதாவது கால் சதவிகிதம்!
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications