சென்னையில் மாபெரும் டைட்டன் ஷோரூம்!
டாடாவின் டைட்டன் நிறுவனத்தின் அங்கமான தனிஷ்க் அடுத்தமாதம் சென்னையில் பெரிய ஷோரூம் ஒன்றைத் திறக்க திட்டமிட்டுள்ளது.
தற்போது சென்னையில் 22000 சதுர அடி பரப்பளவில் ஒரு தனிஷ்க் ஷோரூம் இயங்கி வருகிறது. நாட்டிலேயே தனிஷ்க் நிறுவனத்தின் பெரிய ஷோரூம் இதுதான். இதை மிஞ்சும் வகையில் இதே போல 4 பெரிய ஷோரூம்களை விரைவில் தனிஷ்க் திறக்கிறது.
அதற்கான இடங்கள் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அதே நேரம் சென்னை தவிர்த்த பிற நகரங்களில் இதுபோன்ற ஷோரூம்களைத் திறக்கும் திட்டம் இந்த ஆண்டு இல்லை என மண்டல வர்த்தக மேலாளர் வித்யாசாகர் அறிவித்துள்ளார்.
புதிய ஷோரூம் அமைக்கும் பணி அடுத்த மாதத்துக்குள் முடிந்துவிடும் என்றும், தீபாவளிக்கு கூடுதலாக புதிய நகைகள் மற்றும் வைர நகை கலெக்ஷன்களை இந்த ஷோரூம்களில் வைக்கும் திட்டமுள்ளதாகவும் வித்யாசாகர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு முதல் 40 சதவிகித அளவுக்கு வைர நகைகளை தனிஷ்க் ஷோரூம்களைப் பார்க்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
"AI தயாரித்த ரிப்போர்ட் போல உள்ளது.." கீழடி அறிக்கையை திருத்த சொன்ன மத்திய அரசுக்கு அமர்நாத் பதிலடி -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications