நடிகர் தியாகுவின் தம்பி கடத்தல்?-மனைவி புகார்
கோவை: பிரபல திரைப்பட நடிகர் தியாகுவின் தம்பி ராஜாராமனை ஏழு பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்றுவிட்டதாக அவரது மனைவி கோயம்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், அவர் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டதாக போலீஸ் தரப்பு கூறியுள்ளது.
பிரபல திரைப்பட நடிகர் தியாகு. இவரது தம்பி ராஜாராமன் (42). கோயம்புத்தூர் சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாலாஜி நகரில் வசித்து வரும் ராஜாராமன் பிளாஸ்டிக் கம்பெனி ஒன்றை நடத்தி வருகின்றார்.
இந்த நிலையில் ராஜாராமன் மனைவி கற்பகம், மகள் காருண்யா ஆகியோர் ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றார்.
காரில் இருந்து, மனைவி, மகள் இறங்கியதும், காரை பார்க்கிங் செய்ய ராஜாராமன் சென்றார். அப்போது, மின்னல் வேகத்தில் மற்றொரு காரில் வந்தவர்கள், ராஜாராமை கூட்டி சென்றனர்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராஜாராமனின் மனைவி கற்பகம், கோவை போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார். இது குறித்து விசாரிக்க, ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு கோவை போலீஸ் கமிஷனர் மஹாலி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், ராஜாராமின் நெருங்கிய உறவினர் ஒருவர் கும்பகோணம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை விசாரிப்பதற்காகவே, கோவை வந்த கும்பகோணம் போலீசார் ராஜாராமை அழைத்துச் சென்றதாக போலீஸ் வட்டாரம் கூறுகிறது.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications