நடப்பு நிதியாண்டில் 1 பில்லியன் டாலர் வருவாய் - டைட்டன் இலக்கு

நகைகள், கைக்கடிகாரம் உள்ளிட்டவற்றின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது டாடா குழுமம் மற்றும் தமிழ்நாடு தொழில் வர்ச்சிக் கழகத்தின் கூட்டு அமைப்பான டைட்டன் இன்டஸ்ட்ரீஸ்.
நடப்பு நிதியாண்டில் தனது நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு நிதியாண்டில் 1 பில்லியன் டாலர் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் 65 சதவீத வருவாய், தங்க நகைகள் விற்பனை மூலம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
2008-09 நிதியாண்டில் டைட்டன் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வருவாய் ரூ. 3847.72 கோடியாக இருந்தது.
மொத்த வருவாயில் நகைகள் மூலம் கிடைத்த வருமானம் ரூ. 2763.2 கோடியாகும். கைக்கடிகாரங்கள் மூலம் கிடைத்த வருவாய் ரூ. 908.49 கோடியாகும். மீதமுள்ள வருவாய், கண்கண்ணாடி, பொறியியல் சாதனங்கள் மூலம் கிடைத்தது.
கோல்ட்பிளஸ் மற்றும் டனி்ஸ்க் கடைகள் மூலம் டைட்டனின் நகைகள் விற்கப்படுகின்றன.
ஊரக சந்தையை கோல்ட் பிளஸ் நிறுவனம் கவனிக்கிறது. பெருநகரங்களில் டனிஸ்க் கடைகள் விற்பனையை மேற்கொள்கின்றன.
அடுத்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் கோல்ட் பிளஸ் நிறுவனம் ரூ. 2000 கோடி வருவாயை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோல்ட் பிளஸ் கடைகள் முதன் முதலில் 2005ம் ஆண்டு தமிழகத்தின் ஈரோட்டில் தொடங்கப்பட்டன. முதலில் இரு கடைகள் தொடங்கப்பட்டன. பின்னர் மத்தியப் பிரதேச மாநிலம் ரட்லாமில் கிளைகள் தொடங்கப்பட்டன. தற்போது மொத்தம் 30 கடைகள் கோல்ட் பிளஸுக்கு உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications