அதிமுக முன்னாள் எம்பி டி.ஹீராசந்த் மரணம்
விழுப்புரம்: அதிமுக முன்னாள் எம்பியும், விழுப்புரம் மாவட்ட அதிமுக அவைத் தலைவருமான ஹீராசந்த் மரணமடைந்தார்.
விழுப்புரம் மாவட்ட அதிமுக அவைத் தலைவராக இருந்தவர் ஹீராசந்த் (68). இவர் ராஜ்யசபா உறுப்பினராகவும், திண்டிவனம் நகர்மன்ற தலைவராகவும், ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்ட அதிமுக செயலாளராகவும் பணியாற்றிவர். மேலும் பல்வேறு சங்களில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார்.
இவர் கடந்த சில மாதங்களாக உடல் நிலை சரியின்றி இருந்து வந்தார். இந் நிலையில் திண்டிவனத்தில் உள்ள அவரது வீட்டில் அவர் மரணமடைந்தார்.
இவர் மறைந்த செய்தியை கேட்டதும் விழுப்புரம் மாவட்டம்
மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிமுக.பிரமுகர்கள், மற்றும் பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் நிர்வாகிகள் , முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள், பொது மக்கள் அகியோர் அவரது வீட்டிற்கு சென்று உடலுக்கு மாலை அணிவித்து, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
மரணடைந்த ஹீராசந்த்க்கு சுசீலா தேவி என்ற மனைவியும், பப்லாசா, ஜீன்ராஜ், நவீன்குமார் ஆகிய மகன்கள் உள்ளனர்.
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications