கல்யாண மண்டபங்களுக்கு கடும் கிராக்கி!!
சென்னை: நல்ல மாப்பிள்ளை கிடைக்க வேண்டுமே, நல்ல பெண் கிடைக்க வேண்டுமே என்ற கவலை போய், முதலில் நல்ல கல்யாண மண்டபம் கிடைக்க வேண்டுமே என்ற கவலையில் சென்னை பெற்றோர்கள் மூழ்கிப் போயுள்ளனர்.
இதென்ன கலாட்டா என்கிறீர்களா... மாப்பிள்ளை, பெண் பார்ப்பதற்கு முன்பே கல்யாண மண்டபத்தைத் தேடும் நிலைக்கு சென்னை மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். கல்யாண மண்டபங்களுக்கு அவ்வளவு கிராக்கி உள்ளது. ஒரு வருடத்திற்கு கல்யாண மண்டபங்கள் புக் ஆகி விட்டனவாம். இதனால் கல்யாணத்தை நிச்சயம் செய்தவர்கள் மண்டபம் கிடைக்காமல் அல்லலுறும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது நடந்து வரும் விரோதி ஆண்டில் மொத்தமே 45 முகூர்த்த நாட்கள்தான் உள்ளன. ஆனால் கல்யாணங்களோ நூற்றுக்கணக்கில் உள்ளன. எனவே மண்டபங்கள் கிடைக்காமல் மக்கள் தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலான மண்டபங்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் முன்பதிவு முடிந்து விட்டதாம். மண்டபம் கிடைக்காததால் பல மணமக்கள் மாதக்கணக்கில் காத்திருக்கிறார்கள்.
முன்பெல்லாம் 3 மாதத்திற்கு முன்புதான் மண்டபத்தை புக் செய்யக் கிளம்புவார்கள். ஆனால் இப்போதோ ஒரு ஆண்டுக்கு முன்பே புக் செய்து விடுகிறார்கள். அல்லது மண்டபத்தை புக் செய்த பின்னர் கல்யாணத் தேதியை முடிவு செய்கிறார்கள்.
மண்டபம் கிடைக்காத நிலை ஒரு பக்கம் என்றால் தாறுமாறாக ஏறிக் கிடக்கும் வாடகையும் மக்களை அதிர்ச்சி அடைய வைப்பதாக உள்ளது.
சாதாரண மண்டபம் முதல் மிகப் பெரிய மண்டபங்கள் வரை வாடகை ஏகமாக உள்ளது.
எழும்பூர், தியாகராய நகர், அடையாறு, வடபழனி, அண்ணா நகர் ஆகிய இடங்களில் உள்ள பிரபலமான திருமண மண்டபங்கள் அனைத்தும் இந்த ஆண்டுக்கான முகூர்த்த தினங்கள் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.
மண்டபம் கிடைக்காமல் அவதிப்படும் சாதாரண மக்கள், வேறு வழியில்லாமல் கோவில்களில் வைத்து கல்யாணத்தை நடத்தி முடித்து விட்டு போய் விடுகிறார்கள்.
கோவிலில் கல்யாணம், அருகில் உள்ள ஹோட்டலில் சாப்பாடு என சிம்பிளாகவும் முடிந்து விடுகிறது.
வாடகைக்கு வீடு கிடைப்பது குதிரைக் கொம்பாகியுள்ள நிலையில் இப்போது கல்யாணத்திற்கு மண்டபமும் கிடைப்பது கடும் சிக்கலாகியிருப்பதால் சென்னை மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்து போயுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications