புதுக்கோட்டை மாவட்ட கலெக்டராக சுகந்தி நியமனம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டக் கலெக்டராக சுகந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தலைமைச் செயலர் ஸ்ரீபதி பிறப்பித்துள்ள உத்தரவில்,
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த ரீட்டா ஹரிஷ் தாக்கர் அங்கிருந்து மாற்றப்பட்டு, வருவாய்த் துறை துணைச் செயலராக
நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே போன்று, வேலூர் மாவட்ட கூடுதல் கலெக்டராக பணியாற்றி வந்த சுகந்தி, அங்கிருந்து மாற்றப்பட்டு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டராக
நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.
9 உதவி ஆணையர்கள் மாற்றம்
இதற்கிடையே, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களைச் சேர்ந்த 9 உதவி ஆணையர்கள், 5 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை திருவொற்றியூர் உதவி கமிஷனராக இருந்த விஜயராகவன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
செம்பியம் உதவி கமிஷனர் கிருஷ்ணன், கடலூர் மது விலக்குப் பிரிவுக்கும், மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் ராமதாஸ், சென்னை குற்ற ஆவணக் காப்பகத்துக்கும், அம்பத்தூர் உதவி கமிஷனர் பாலசுப்பிரமணியம், தலைமைச் செயலக பாதுகாப்பு பிரிவுக்கும், திருவள்ளூர்மாவட்ட மதுவிலக்குப் பிரிவு டிஎஸ்பி கிங்ஸ்லி, திருவொற்றியூருக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை நகரில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர்கள் பன்னீர்செல்வம் - ராஜமங்கலம் குற்றப் பிரிவுக்கும், ஜெயச்சந்திரன் - அடையாறு குற்றப் பிரிவுக்கும், சங்கர் - ராயப்பேட்டை குற்றப் பிரிவுக்கும், வீரக்குமார் - சைதாப்பேட்டை குற்றப் பிரிவுக்கும், கலியன் - அபிராமபுரம் குற்றப் பிரிவுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications