விதிகளை மீறும் ஆந்திரா-கேரளா: துரைமுருகன்

சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின்போது மார்க்சிஸ்ட் உறுப்பினர் டெல்லி பாபு, காங்கிரஸ் உறுப்பினர் ராமன், திமுக உறுப்பினர் அன்பழகன் ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு துரைமுருகன் பதிலளி்க்கையில்,
ஆறுகள், ஓடைகளின் குறுக்கே சிறு சிறு தடுப்பணைகள், குட்டைகள், கசிவு நீர் குட்டைகள் ஆகியவற்றை அமைப்பதற்கு கடந்த ஆண்டு ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டது.
இதில் 103 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 88 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இந்தப் பணிகளுக்காக மேலும் ரூ. 200 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இதில் பொதுப் பணித்துறைக்கு ரூ. 100 கோடியும், வேளாண்துறை, வனத்துறை உள்ளிட்ட பிற துறைகளுக்கு ரூ. 100 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் இதுபோன்ற சிறு சிறு தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று தெரிவித்தால், தேவையின் அடிப்படையில் அந்தப் பணிகள் எடுத்துக் கொள்ளப்படும்.
இரு மாநிலங்களில் ஓடும் ஆறுகளில் அணைகள் கட்டுவதற்கு சில விதிமுறைகள் உண்டு. மேல் பகுதி மாநிலத்தில் அணை கட்டுவது என்றால், கீழ்பகுதியில் உள்ள மாநிலத்துடன் கலந்துபேசி அவர்களுடைய ஒப்புதலோடுதான் பணிகள் செய்யப்பட வேண்டும்.
இது தொடர்பாக சட்டமும் விதிகளும் இருந்தாலும் இதை எந்த மாநிலமும் மதிப்பது இல்லை.
பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஆந்திர அரசு தமிழகத்திடம் அனுமதி பெறவில்லை வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்று செயல்படுகிறார்கள்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அணையின் உயரத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை கேரள அரசு ஏற்க மறுத்து வருகிறது. இது வேதனையான விஷயம் என்றார் துரைமுருகன்.
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications