விழாவில் தீக்குண்டம் இறங்கிய பாட்டி பலி
வேலூர்: வேலூர் அருகே கோயில் விழாவில் தீக்குண்டம் இறங்கிய மூதாட்டி உடல் கருகி பரிதாமாக பலியானார்.
வேலூர் தாலுகா அப்புக்கல் குடிசை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். விவசாயி. இவரது மனைவி தஞ்சம்மாள் (60). இவர்களது திருமணமான பேத்தி ஒருவர் கர்ப்பமாக இருந்தார்.
அவருக்கு அது தலைபிரசவம் என்பதால் அது நல்லபடியாக நடந்தால் நேர்த்திக் கடனாக நீதி மாரியம்மன் கோயில் விழாவில் தீக்குண்டம் இறங்குவதாக தஞ்சம்மாள் வேண்டிக் கொண்டார்.
அதேபோல் பேத்திக்கு சுகப்பிரசவம் நடந்தது. இதனால் தனது பிரார்த்தனையை நிறைவேற்ற தஞ்சம்மாள் முடிவு செய்தார்.
அதன்படி கடந்த 7 -ம் தேதி நீதி மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. அந்த திருவிழாவில் வழக்கம் போல் தீக்குண்டம் அமைக்கப்பட்டது. அதில் ஏராளமானோர் நேர்த்திக் கடனை நிறைவேற்ற தீக்குண்டம் இறங்கினர்.
அதேபோல் தனது பிரார்த்தனையை நிறைவேற்ற தஞ்சம்மாளும் தீக்குண்டம் இறங்கினார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அவர் குண்டத்தில் தவறி விழுந்து விட்டார். இதில் அவரது உடல் கருகியது.
உடனடியாக வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications