ராகுல் பிறந்த நாள்-மு.க. ஸ்டாலின் வாழ்த்து
சென்னை: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியின் 39வது பிறந்த நாளையொட்டி அவருக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
அதில், நீங்கள் இன்று போல் என்றும் வாழ வாழ்த்துகிறேன். இந்திய இளைஞர்கள் அறிவும், திறமையும் வாய்ந்தவர்கள். தாய் நாட்டின் முன்னேற்றத்துக்காக அப்படிப்பட்ட இளைஞர் சக்தியை நீங்கள் வழி நடத்தி செல்வதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். உங்களது குறிக்கோள் நிச்சயம் நிறைவேறும்.
நாட்டின் முன்னேற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் நீங்கள் நீண்ட நாள் மகிழ்ச்சிகரமாக வாழ மீண்டும் என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.
ராகுல் காந்திக்கு திமுக பிறந்த நாள் வாழ்த்து அனுப்புவது இதுவே முதல் முறையாகும்.
சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்..
ராகுல் காந்தியின் பிறந்த தின விழா சென்னை சத்திய மூர்த்தி பவனில் கொண்டாடப்பட்டது.
.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தங்கபாலு 39 கிலோ எடை கொண்ட கேக்கை வெட்டினார். இதில் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம், துணைத் தலைவர் யசோதா, முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், எம்எல்ஏ காயத்திரி தேவி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து இலவச இதய பரிசோதனை முகாம் மற்றும் ரத்த பரிசோதனை முகாம்களை தங்கபாலு துவக்கி வைத்தார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய தங்கபாலு,
ராகுல் காந்தி பிறந்தநாளை மத நல்லிணக்க நாளாக தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகிறோம். தாழ்த்தப்பட்டோருடன் சமபந்தி விருந்தும் தமிழகம் முழுவதும் இன்று சுமார் 1,000 இடங்களில் நடைபெறுகிறது.
மத்தியில் காங்கிரஸ் தனித்து நல்லாட்சி அமைய வேண்டும். அதே போல் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் தனித்து ஆட்சி அமைக்க வேண்டும் என்பது தான் ராகுல் காந்தியின் விருப்பம்.
ராகுல் காந்தியின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் தமிழகத்தில் 2011ல் காங்கிரஸ் தனித்து ஆட்சி அமைப்பதற்கான வேலைகளில் கட்சி தொண்டர்கள் ஈடுபடுவார்கள் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications