இளவரசர் வில்லியம்ஸ் சண்டை போடனுமாம்!

வருங்கால இங்கிலாந்தின் மன்னரான வில்லியம் விமானப்படையில் இணைந்து தேடுதல் மற்றும் மீட்பு பைலட்டாக பயிற்சி பெற்று வருகிறார்.
இந்த நிலையில் நேரடிச் சண்டையில் பங்கேற்க தான் ஆவலாக இருப்பதாக கூறியுள்ளார் வில்லியம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், விமானப்படையை விட்டு விலகிச் செல்வதற்கு முன்பு நேரடிச் சண்டையில் பங்கேற்று விட வேண்டும் என ஆர்வத்துடன் உள்ளேன். அது நிச்சயம் நடைபெறும் என நம்புகிறேன்.
நான் வெறுமனே அலங்காரத்திற்காக விமானப்படையில் சேரவில்லை. எனக்கு எந்தவித சலுகையும் தரப்படுவதை நான் விரும்பவில்லை. என்னைப் பொறுத்தவரையில், எனது சகோதரன் ஹாரி ஒன்றை செய்யும்போது, என்னாலும் அதைச் செய்ய முடியும் என்று நம்புகிறேன்.
ஆப்கானிஸ்தான் சென்று அங்கு நடைபெறும் சண்டையில் பங்கேற்க விரும்புகிறேன் என்றார்.
ஆனால் வில்லியமை போர்க்களத்திற்கு அனுப்புவதற்கு வாய்ப்பே இல்லை என்று விமானப்படை அதிகாரிகள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications