ஹைதராபாத் மெட்ரோ ரயில் திட்டம்: மேடாஸ் நீக்கம்!
டெல்லி: ரூ.12000 கோடி மதிப்பீட்டில் உருவாகவிருந்த ஹைதராபாத் மெட்ரோ ரயில் திட்டத்திலிருந்து மேடஸ் நிறுவனம் விலக்கப்பட்டுள்ளதாக ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி தெரிவித்துள்ளார்.
சத்யம் நிறுவனரும், பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடியில் சிக்கி சிறையில் இருப்பவருமான ராமலிங்க ராஜூவின் மகன்கள் நிர்வாகத்தில் உள்ளதுதான் மேடாஸ் நிறுவனம். சத்யம் நிறுவனம் பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டதற்கு இந்த நிறுவனமும் ஒரு காரணம்.
இன்னொரு பக்கம் சத்யம் சாம்ராஜ்யம் சரிந்த போதே, மேடாஸும் பல பிரச்சினைகளில் சிக்கி நெருக்கடிக்குள்ளானது.
ராமலிங்க ராஜு சர்வ பலத்துடன் இருந்த போது ஹைதராபாத் ரயில் திட்டத்தை நிறைவேற்ற மேடாஸ் மெட்ரோ கன்ஸார்டியம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
இதில் மேடாஸ் இன்ப்ரா, நவபாரத் மவென்சர்ஸ், ஐடல் தாய் மற்றும் ஐஎல் அண்ட் எப்எஸ் ஆகிய நான்கு நிறுவனங்கள் இடம்பெற்றன. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக மேடாஸ் மெட்ரோ எனும் புதிய நிறுவனத்தையே மேடாஸ் துவங்கியது. ரூ 12000 கோடி செலவில் இத்திட்டம் நிறைவேற்றப்பட இருந்தது.
ஆனால் சத்யம் மோசடிக்குப் பின் எழுந்த புதிய சூழல் காரணமாக எதிர்பார்த்தபடி நிதியைத் திரட்ட முடியவில்லை மேடாஸ் நிறுவனத்தால்.
எனவே ஹைதராபாத் மெட்ரோ ரயில் திட்ட பணியிலிருந்து மேடாஸ் மெட்ரோ ரயில் கன்சார்டியம் விலக்கப்படுவதாக ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி அறிவித்துள்ளார்.
இத்திட்டத்தை நிறைவேற்ற உள்ள புதிய நிறுவனம் மற்றும் இதர விவரங்கள் குறித்து பின்னர் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.
இதனால் ஹைதராபாத் மக்களின் மெட்ரோ ரயில் கனவு நிறைவேறுவது மேலும் தள்ளிப் போயுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications