பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் ஊடுறுவிய ரஷ்ய விமானம் தரையிறக்கம்
மும்பை: பாகிஸ்தானுக்குள்ளிருந்து இந்திய வான் எல்லைக்குள் அத்துமீறி ஊடுறுவிப் பறந்த ரஷ்ய தயாரிப்பு ராணுவ விமானத்தை இந்திய விமானப்படையினர் வலுக்கட்டாயமாக தரையிறக்கினர்.
பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து ஆப்கானிஸ்தானின் காந்தஹாருக்கு நேற்று இரவு ஏஎன்-124 என்ற ராணுவ சரக்கு விமானம் பறந்து கொண்டிருந்தது. அப்போது அது திடீரென இந்திய வான் பகுதிக்குள் நுழைந்து பறந்தது.
இதைப் பார்த்த விமானப்படையினர் உடனடியாக அந்த விமானத்தை வெளியேறுமாறு எச்சரித்தனர். இதையடுத்து இரு விமானப்படை விமானங்கள் விரைந்தன. சம்பந்தப்பட்ட விமானத்தை மும்பைக்குத் திருப்புமாறு உத்தரவிட்டனர். மேலும், அந்த விமானம் தப்பிப் போய் விடாமல் கூடவே வந்த இரு விமானப்படை விமானங்களும், மும்பையில், அந்த பாகிஸ்தான் விமானத்தை தரையிறக்கச் செய்தன.
தரையிறக்கப்பட்ட விமானம் ரஷ்யத் தயாரிப்பு விமானம் ஆகும். ஆனால் விமானத்தில், அமெரிக்க ராணுவக் குறியீடுகள் உள்ளன. விமானத்தில் ஐந்து ஊழியர்கள் இருந்தனர். வெடிபொருட்களும் இருந்தன.
விமானத்தில் இருந்தவர்களிடம் ராணுவ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்லனர்.
இந்த விமானம் மொரீஷீயஸ் அருகே உள்ள டிகோ கார்சியா தீவிலிருந்து புறப்பட்ட அமெரிக்க விமானமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இந்த விமானம் காந்தஹாருக்குப் போய்க் கொண்டிருந்ததாகவும் விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications