டி.ஆர்.எஸ். கட்சியிலிருந்து சந்திரசேகர ராவ், விஜயசாந்தி திடீர் ராஜினாமா
ஹைதராபாத்: தெலுங்கான ராஸ்டிரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் இன்று கட்சியின் பொதுச் செயலாளரான விஜயசாந்தியும் ராஜினாமா செய்ததால் கட்சி பெரும் குழப்பத்தில் மூழ்கியுள்ளது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கட்சி டி.ஆர்.எஸ். எனப்படும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி. ஆனால் எந்த வேகத்தில் வளர்ந்ததோ அதே வேகத்தில் அது சரிவையும் சந்தித்துள்ளது.
கட்சிக்குள் ஏற்பட்ட தொடர் பிரச்சினைகள், தேர்தல் தோல்விகள் காரணமாக கட்சியில் பெரும் குழப்ப நிலை காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று திடீரென கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் தனது தலைவர் பதவியை விட்டு விலகுவதாக அறிவித்தார்.
இந்த நிலையில் இன்று பொதுச் செயலாளரான நடிகை விஜயசாந்தியும் தனது ராஜினாமாவை அறிவித்தார்.
இதனால் கட்சியினர் பெரும் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்துள்ளனர்.
உட்கட்சிப் பூசலை தடுக்கவே ராவும், விஜயசாந்தியும் இந்த ராஜினாமா முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications