வணங்கா மண் கப்பல் ஊழியர்களில் சிலருக்கு உடல் நலம் பாதிப்பு

இதையடுத்து வணங்கா மண் கப்பலிலிருந்து உதவி கோரப்பட்டால் உடனடியாக செய்ய சென்னை துறைமுகம் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.வி. கேப்டன் அலி என்று பெயரிடப்பட்ட வணங்கா மண் கப்பலில் ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் சேகரித்து அனுப்பிய நிவாரணப் பொருட்கள் உள்ளன. இந்தப் பொருட்களுடன் வன்னிப் பகுதிக்கு இக்கப்பல் வந்தபோது கப்பலை உள்ளே நுழைய விடாமல் அப்படியே திருப்பி அனுப்பி விட்டது இலங்கை அரசு.
இதனால் எங்கு போவது என்று தெரியாமல் வணங்கா மண் கப்பல் சென்னைக்கு அருகே 18 கடல் மைல் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இக்கப்பலில் 13 ஊழியர்கள் உள்ளனர். அவர்களின் உடல் நலம் தற்போது மெல்ல மெல்ல பாதிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆரோக்கியமான குடிநீர், உணவு ஆகியவை கிடைக்காததால் கப்பல் ஊழியர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
சிரியாவைச் சேர்ந்த ஒருவர் மற்றும் ஐஸ்லாந்தைச் சேர்ந்த ஒருவர் ஆகிய இருவருக்கு தற்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாம். இவர்கள் இருவரும் இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவில் முன்பு இடம் பெற்றிருந்தவர்கள்.
கொண்டு வந்த நிவாரணப் பொருட்களை சென்னையில் இறக்குவதற்காக தற்போது கப்பல் காத்திருப்பதாக தெரிகிறது. இதுதொடர்பாக மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாம்.
இந்த நிலையில் கப்பல் ஊழியர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு வருவதால், அவசர உதவிகள் தேவைப்பட்டால் செய்வதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக சென்னை துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications