நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 10 சதவிகித பங்குகளை மீண்டும் விற்க முயற்சி!
சென்னை: நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்கிறது மத்திய அரசு. ஆனால் அரசின் இந்த முடிவை கடுமையாக எதிர்க்கப் போவதாக திமுக அறிவித்துள்ளது.
இந்தியாவில் நிலக்கரி தொடர்பான 10 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்க திட்டமிட்டுள்ளது மத்திய அரசு.
மத்திய நிலக்கரித் துறை மந்திரி ஸ்ரீபிரகாஷ் ஜெயிஸ்வால் இதுகுறித்துக் கூறுகையில், இந்திய நிலக்கரி நிறுவனம், அதன் 7 துணை நிறுவனங்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் ஆகியவற்றின் குறிப்பிட்ட சில பங்குகளை தனியாருக்கு விற்பது தவிர்க்க முடியாததாக உள்ளது.
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 6.5 சதவீத பங்குகள், மும்பை பங்குச் சந்தையில் ஏற்கனவே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அந்நிறுவனத்தின் 93.5 சதவீத பங்குகளை மத்திய அரசு தன்வசம் வைத்துள்ளது. ஆனால் இதில் மேலும் 10 சதவீத பங்குகளை மத்திய அரசு 2006-ல் விற்க முயன்றது. அப்போது தி.மு.க. அரசுதான் அதைத் தடுத்து நிறுத்தியது. அன்றைக்கு காங்கிரஸ் அரசு மைனாரிட்டியாக இருந்ததால் திமுகவுக்கு உடனடியாகப் பணிந்தது.
ஆனால் மறுபடியும் இப்போது நெய்வேலி நிலக்கரி நிறுவனப்பங்குகளை விற்க முயல்கிறது காங்கிரஸ் அரசு.
காரணம் முன்பை விட பலமான நிலையில் காங்கிரஸ் அரசு இருப்பதே.
இதுகுறித்து திமுக தரப்பில் விசாரித்தபோது, அரசின் இந்த முயற்சியை இப்போதும் கடுமையாக எதிர்ப்போம் என திமுக கூறியுள்ளது.
-
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications