சென்னையில் 2 பேருக்கு ஸ்வைன்-இந்தியாவில் 59

ஸ்வைன் ப்ளூ எனப்படும் பன்றி காய்ச்சல் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. உலக சுகாதார மையத்தின் கணக்கு படி இதுவரை உலகம் முழுவதும் சுமார் 44 ஆயிரத்து 287 ஸ்வைன் ப்ளூவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 180 பேர் பலியாகி இருக்கின்றனர்.
இந்தியாவில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களில் ஸ்வைன் ப்ளூ அறிகுறி கொண்ட 421 பேரின் ரத்த மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன. இவர்களில் 138 பேர் விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
20 பேர் பாதிக்கப்பட்டவர்களுக்கு அருகில் நெருங்கி பழகியதால் சோதிக்கப்பட்டவர்கள் மற்றவர்கள் அனைவரும் தாங்களாகவே முன் வந்து ஸ்வைன் ப்ளூ அறிகுறி இருப்பதை தெரிவித்தவர்கள்.
சென்னையில் 2 பேருக்கு...
இந்நிலையில் கடந்த ஜூன் 13ம் தேதி அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் இருந்து சென்னை வந்த 29 வயது கணவனுக்கும், அவரது 25 வயது மனைவிக்கும் ஸ்வைன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 17ம் தேதி நியூயார்க் நகரிலிருந்து டெல்லி வந்த பயணி ஒருவருக்கும் ஸ்வைன் ப்ளூ இருப்பது சோதனையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் ஸ்வைன் ப்ளூ நோயால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. இதில் 16 பேர் டெல்லியை சேர்ந்தவர்கள்.
32 பேர் டிஸ்சார்ஜ்...
இது டெல்லி சுகாதார செயலர் ஜெ.பி.சிங் கூறுகையில், நோயாளிகள் வேகமாக குணமாகி வருகின்றனர். இதுவரை 32 பேர் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பி விட்டனர். இன்று மேலும் 5 அல்லது 6 பேர் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். இந்தியாவில் ஸ்வைன் ப்ளூ அபாய கட்டத்தை நெருங்ககூட இல்லை என்றார் அவர்.
-
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications