பல்லடம் அருகே பயங்கரம் - மணல் லாரி அடுத்தடுத்து 4 வாகனங்களில் மோதி 14 பேர் பலி
பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இன்று மாலை மணல் லாரி ஒன்று டெம்போ டிராவலர், 3 கார்கள் மீது அடுத்தடுத்து மோதியதில் 14 பேர் உயிரிழந்தனர்.
கோவை மாவட்டம் மதுக்கரையிலிருந்து பெண் பார்ப்பதற்காக கீரனூர் நோக்கி டெம்போ டிராவலர் வேனில் ஒரு குடும்பத்தினர் சென்று கொண்டிருந்தனர்.
அவர்கள் பயணம் செய்த வேன், பல்லடம் அருகில் லட்சிமி மில்ஸ் பகுதியில் சென்றபோது எதிர் திசையில் மணல் ஏற்றி வந்த லாரி பயங்கரமாக மோதியது.
இதில் டெம்போ டிராவலரில் பயணித்த ஒரு குழந்தை உள்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பின்னர் நிற்காமல் தொடர்ந்து தாறுமாறாக சென்ற லாரி ஒரு கார் மோதி சேதப்படுத்தியது. பிறகும் நிற்காமல் அதி வேகமாக சென்ற அந்த எமன், மேலும் இரு கார்களை மோதித் தள்ளியது.
இதில் 2வதாக மோதிய ஒரு இன்டிகா காருக்குள் இருந்த இருவர் லாரியின் அடியில் சிக்கி பரிதாபமாக மாண்டனர்.
இப்படி நான்கு வாகனங்களை மோதித் தள்ளி விட்டு 14 பேரின் உயிரைக் குடித்த மணல் லாரி சாலையோரமாக உள்ள பள்ளத்தில் போய் மோதி நின்றது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து விட்ட இந்த கோர விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications