ரயிலில் உணவு-அதிக விலைக்கு விற்றால் உரிமம் ரத்து
சென்னை: ரயிலில் விற்கப்படும் உணவு பொருட்களின் விலை கணிசமாக குறைக்கப்படும். இதை மீறி கூடுதல் விலைக்கு விற்பவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் ரயில் உணவுகளின் விலை அதிகரிக்கப்பட்டது. அது மட்டுமில்லாமல் உணவு பொருட்களின் அளவும் சுருங்கி போனது. இந்நிலையில் ரயில்வே நிலவும் இந்த அவல சூழ்நிலை குறித்து ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து அவர் விலைகளை குறைக்க உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தற்போது ரயில்வே உணவுகளை வழங்கி வரும் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) விலைகளை குறைத்து பழைய விலைகளில் விற்க வேண்டும் என்றும், அதை மீறுபவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் கூறியுள்ளது.
இது தொடர்பாக ஐஆர்சிடிசி அனைத்து ரயில்வே கடை விற்பனையாளர்களுக்கும், ஏஜென்ட்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில்,
ரயில் நிலையங்களில் சைவ சாப்பாடு ரூ. 30க்கு விற்கப்பட வேண்டும். இதோடு தயிர் வழங்கப்பட வேண்டும். தயிருக்காக கூடுதலாக ரூ. 5 வாங்க கூடாது.
அதே போல், ஏசி பெட்டிகளில் விற்கப்படும் காபி ரூ. 14லிருந்து ரூ. 7 ஆகவும், டீ ரூ. 10லிருந்து 5 ஆகவும் விலை குறைத்து விற்கப்படும். இந்த விலையை விட கூடுதலாகவோ அல்லது இந்த விலையில் அளவு குறைவாகவோ கொடுக்கப்பட்டால் அந்த விற்பனையாளரின் உரிமம் ரத்து செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில்,
இது தொடர்பாக புகார் செய்ய விரும்புபவர்கள் 1800 111 139 என்ற இலவச எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த முறை கூடுதல் விலைக்கு விற்றதாக கூறப்பட்ட சிலருக்கு இம்முறை உரிமம் வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக புதிய டெண்டர்கள் விடப்படும். புதிய ஒப்பந்தக்காரர்கள் இன்னும் ஒரிரு மாதத்தில் விற்பனையை துவக்குவார்கள் என அந்த அதிகாரி தெரிவித்தார்.
ரயில்வே நிலையங்களில் விற்கப்படும் புதிய உணவு பொருட்களி்ன் பட்டியல்:
6 சப்பாத்தி- ரூ.30
3 பரோட்டா வெஜிடபுள் குருமா- ரூ.30
நெய் ரோஸ்ட் தோசை - ரூ.23
மாசலா தோசை- ரூ.20
எலுமிச்சை சாதம் (தயிர், சாம்பார்)- ரூ.20
2 ஆப்பம், வெஜிடபுள் குருமா- ரூ.19
வெஜிடபுள் நூடுல்ஸ் மற்றும் முட்டை நூடுல்ஸ்- ரூ.19
சாம்பார் வடை- ரூ.19
பூரி கிழங்கு (6 பூரி)- ரூ.17
4 இட்லி (தலா 50 கிராம் சாம்பார், சட்னியுடன்)- ரூ.17
வெஜிடபுள் உப்புமா (200 கிராம்)- ரூ.17
வெண் பொங்கல் (200 கிராம்)- ரூ.17
ரவா தோசை- ரூ.15
2 மெதுவடை- ரூ.14
2 பருப்பு வடை- ரூ.14
ரவா கிச்சடி- ரூ.13
முட்டை ஆம்லெட்- ரூ.13
ஹார்லிக்ஸ் (150 மி.லி.,)- ரூ.13
தக்காளி சூப் (150 மி.லி.,)- ரூ.10
பால் (150 மி.லி.,)- ரூ.9
தோசை (70 கிராம்)- ரூ.9
ஆப்பம் (50 கிராம்)- ரூ.6
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications