கற்பழித்து கடத்தப்பட்ட பெண் 51 நாட்களுக்கு பின் மீட்பு-டாக்டர் கைது
நாகர்கோவில்: கன்னியாகுமரி அருகே காணாமல் போன 17 வயது இளம் பெண்ணை போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர். தன்னை பெண் டாக்டரின் கணவர் ஒருவர் கற்பழித்து கடத்தி வைத்திருந்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதையடுத்து போலீசார் அந்த பெண் டாக்டரை கைது செய்தனர். அவரது கணவரை தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் காமராஜர் சாலையை சேர்ந்த செய்யது என்பவரின் மகள் ரிபாயா (17). இவர் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டிலே இருந்தார். இவர்கள் அப்பகுதியில் உள்ள பெண் டாக்டர் குமுதா என்பவருக்கு சொந்தமான வீட்டில் ஒத்திக்கு இருந்தனர்.
வீட்டில் இருந்த ரிபாயா அடிக்கடி அமுதா வீட்டுக்கு சென்று சிறுசிறு வேலைகளை செய்து வந்தார். அவருக்கு மாதம் ரூ. 500 சம்பளமாக கொடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஒரு நாள் ரிபாயா வீட்டிலிருந்து திடீரென மாயமாகிவிட்டார்.
இதையடுத்து செய்யது, குளச்சல் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் 51 நாட்களுக்கு பின் நேற்று குளச்சல் பேருந்து நிலையத்தில் இரண்டு பெண்களின் துணையுடன் நின்று கொண்டிருந்த ரிபாயாவை போலீசார் மீட்டனர். பின்னர் போலீசார், ரிபாயாவிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம்:
டாக்டர் அமுதா மருத்துவமனைக்கு சென்ற பின்னர் அவருடைய கணவர் கண்ணன் என்னை அடிக்கடி தொட்டு பேசுவார். நான் அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. இந்நிலையில் ஒரு நாள் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அவர் என்னை கற்பழித்துவிட்டார்.
தனது மனைவி அமுதாவுக்கு தெரிந்தால் அவர் தற்கொலை செய்து கொள்வார் என்றும், தனது பிள்ளைகள் இரண்டு அனாதைகளாகிவிடுவார்கள் என்றும், இந்த பழி சொல்லுக்கு நீ தான் ஆளாக வேண்டும் என கூறி என்னை மிரட்டினர். பின்னர் அவர் என்னை பல முறை பலவந்தமாக கற்பழித்தார்.
இந்நிலையில் நான் ஒரு நாள் கர்ப்பம் ஆனேன். இதை கண்ணனிடம் கூறினேன். அப்போது அவர் துணி, நகைகள் எடுத்து கொண்டு வா உன்னை வேறொரு இடத்தில் குடியமர்த்துகிறேன் என கூறினார். நாங்கள் இருவரும் பேசி கொண்டிருந்ததை டாக்டர் அமுதா கேட்டுவிட்டார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கண்ணன், அமுதாவை சமாதானப்படுத்தினார். பின்னர் டாக்டர் அமுதா எனக்கு சில மாத்திரை வாங்கி கொடுத்தார். பின்னர் என்னை வீட்டிலீருந்து ஒரு கார் டிக்கிக்குள் வைத்து அடைத்து திருவிதாங்கோடு சென்றனர். அங்கு அவர்களது மருத்துவமனையில் வேலை பார்க்கும் லலிதா என்ற பெண்ணின் உறவினர்கள் வீட்டில் தங்க வைத்தனர்.
பின்னர் என்னை அங்கிருந்து அழைத்து சென்று ஒரு அனாதை காப்பகத்தில் கீதா என பெயர் மாற்றி என்னை சேர்த்தனர். அங்கு நான் அனாதை இல்லை என்ற உண்மையை கூறியவுடன் என்னை மீண்டும் திருவிதாங்கோட்டில் லலிதாவின் உறவினர்கள் வீட்டில் கொண்டு வந்து விட்டுவிட்டனர்.
அவர்களிடம் நான் உண்மையை கூறியதும். அவர்கள் என்னை குளச்சல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க அழைத்து வந்தனர் என்றார்.
இதையடுத்து போலீசார் பெண் டாக்டர் அமுதாவை கைது செய்தனர். அவர் மீது கடத்தல், வன்கொடுமை சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், அவரது கணவர் கண்ணன் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் போலீஸ் விசாரணையின் போது டாக்டர் அமுதா கூறுகையில்,
ரிபாயா எனது கணவரால் கர்ப்பமானதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். இந்த சம்பவம் வெளியில் தெரிந்தால் அவமானம் என்பதால் அவரை என் வீட்டில் தங்கவைத்து கருவை கலைக்க முயன்றேன். ஆனால், முடியவில்லை. இதையடுத்து அவர் யாருக்கும் தெரியாமல் இருக்க கார் டிக்கிக்குள் வைத்து திருவிதாங்கோடு கடத்தி சென்றோம்.
அவர் அங்கு உண்மையை சொல்லியதால் நாங்கள் மாட்டிகொண்டோம் என்றார் அவர்.
இந்நிலையில் நேற்று மாலை 6.30 மணிக்கு சுமார் 20 பேர் கொண்ட கும்பல் ஒன்ரு டாக்டர் அமுதாவின் வீட்டை சூறையாடியது. ஜன்னல் கண்ணாடி மற்றும் கதவுகளை உடைத்து வீட்டுக்குள் புகுந்தது. அங்கிருந்த டிவி, பிரிட்ஜ் மற்றும் நாற்காலிகளை தூக்கிபோட்டு உடைத்தனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications