'இது மக்கள் பட்ஜெட்!'-மாண்டேக் சிங்
டெல்லி: அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படும் பட்ஜெட் மக்கள் பட்ஜெட்டாக இருக்கும் என மத்திய திட்டக் குழு துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் திட்டங்கள் குறித்த விவரத்தை என்னால் சொல்ல முடியாது. காரணம் அவை இப்போதைக்கு ரகசியமானவை என்றார் அலுவாலியா.
பட்ஜெட் குறித்து அலுவாலியா கூறியதாவது:
2009-2010-ம் நிதி ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் ஜூலை 6-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.
தேர்தலுக்கு முன் தாக்கல்செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட் வரும் ஜூலை 31-ம் தேதிக்குள் முடிந்துவிடும். அதற்குள் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெற்றாக வேண்டும். அதற்கான நடவடிக்கையில் தற்போது நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தீவிரமாக உள்ளார்.
இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி 8 சதவீதம் முதல் 9 சதவீதத்தை எட்ட வேண்டும் என பிரதமர் கருத்து தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார தேக்க நிலையால் இந்தியாவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரதமர் நிர்ணயித்துள்ள இலக்கை எட்டுவதற்கு இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை ஆகும்.
வேலை வாய்ப்பு சார்ந்த திட்டங்களை துரிதப்படுத்துவதை அரசு பிரதானமாக மேற்கொள்ளும். இதன்மூலம் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும். குறிப்பாக வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு கிலோ ரூ.3 விலையில் அரிசி மற்றும் கோதுமை வழங்கும் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலின் யோசனையும் இந்த பட்ஜெட்டில் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
வேளாண் மற்றும் அதிக வேலைவாய்ப்பை அளிக்கும் தொழில்களுக்கு பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்படும். தற்போதைய சூழலில் நடப்பு நிதி ஆண்டில் எந்த அளவு வளர்ச்சி இருக்கும் என கணிக்க முடியாது. இருப்பினும் கடந்த நிதி ஆண்டில் 6.7 சதவீதமாக இருந்ததால் இம்முறை 7 சதவீதத்தை எட்ட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. நடப்பு நிதி ஆண்டில் பல்வேறு திட்டங்களுக்கு அதிக நிதியை ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் நடப்பு நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறை அதிகமாக இருக்கும். அடுத்த நிதி ஆண்டில் இதை ஈடு செய்ய முடியும். செலவுகளை அதிகப்படுத்துவது நல்லது. இருப்பினும் அதற்காக வரம்பு மீறிய செலவினங்களை அனுமதிக்க முடியாது," என்றார் மாண்டேக் சிங் அலுவாலியா.
நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஏற்கெனவே, இந்த பட்ஜெட் பொதுமக்களுக்கான நலத் திட்டங்களுக்கு அதிகம் செலவழிக்கும் பட்ஜெட்டாக இருக்கும் என குறிப்பிட்டது நினைவிருக்கலாம்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications