309 புள்ளிகள் வீழ்ச்சியுடன் துவங்கிய சென்செக்ஸ்!
மும்பை: இன்றைய வர்த்தகத்தில் எடுத்த எடுப்பிலேயே 309 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ். நேற்றைய வர்த்தகத்தின் ஆரம்பம் பரபரப்பாக இருந்தாலும், மாலைக்குள் சென்செக்ஸ் பலவீனமடைந்து 195 புள்ளிகளை இழந்தது.
இன்றும் அந்த வீழ்ச்சி தொடர்ந்தது.
வங்கித் துறை மற்றும் ரியல் எஸ்டேட் பங்குகள் பெரிதும் வீழ்ச்சியடைந்தன. ஐசிஐசிஐ, ஆக்ஸிஸ் போன்ற பங்குகள் அதிக நஷ்டத்தைத் தந்தன. ரிலையன்ஸ், ஓஎன்ஜிஸி, கிராஸிம் போன்ற நிறுவனப் பங்குகள் நல்ல லாபம் தந்தன.
தேசியப் பங்குச் சந்தை நிப்டியிலும் 92 புள்ளிகள் சரிந்தது இன்றைய வர்த்தகத்தின் துவக்கத்தில். மற்ற ஆசிய பங்குச் சந்தைகளிலும் இதே நிலை நீடிக்கிறது. ஹாங்காங் பங்குச் சந்தை 3 சதவிகிதத்துக்கும் மேல் வீழ்ச்சியடைந்தது.
ஜப்பானின் நிக்கி குறியீட்டெண்கள் 2.6 சதவிகிதம் வீழ்ச்சியடைந்தது.
சர்வதேச அளவில் இன்றைய வர்த்தகத்தின்போது முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்பதில் அதிக ஆர்வம் காட்டுவதால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பங்குச் சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications