'எல் நினோ': இந்த ஆண்டு 70% மழை குறையும்!

இதற்கு எல் நினோ காரணமாகக் கூறப்படுகிறது. பசிபிக் கடல் பகுதியில் வெப்பம் அதிகரிப்பதால் ஏற்படும் வானிலை மாற்றம் தான் எல் நினோ. இதனால் தென் அமெரிக்காவிலிருந்து தென் கிழக்கு ஆசியாவை நோக்கி வீசும் காற்றின் வேகம் குறையும். இதனால் மழை குறையும்.
இந்த ஆண்டு எல் நினோ ஏற்பட 50 சதவீத வாய்ப்புள்ளதாக ஆசிய நாடுகளை சர்வதேச வானிலை ஆய்வு மையம் (WMO) எச்சரித்துள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே பருவ மழை வேகம் பிடிக்காத நிலையில் இந்த அறிவிப்பு பெரும் வேதனையாக வந்து சேர்ந்துள்ளது. கேரளத்திலும் மும்பை உள்ளிட்ட நாட்டின் மேற்குப் பகுதிகளில் எதிர்பார்த்தபடி ஆரம்பித்த பருவ மழை அப்படியே நின்றுவிட்டது. தொடர்ந்து மழை பெய்யவில்லை.
உரிய காலத்தில் மழை பெய்யாவிட்டால் நாட்டின் விவசாய உற்பத்திக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். நதி நீர் பங்கீட்டு விஷயத்தில் மாநிலங்களிடையிலான மோதலும் தீவிரமாகும் என மத்திய அரசு அச்சத்தில் ஆழ்ந்துள்ளது.
சர்வதேச பொருளாதார மந்த நிலையால் ஏற்பட்டுள்ள தாக்கத்தை இது மேலும் மோசமாக்கும் என அஞ்சப்படுகிறது. இதனால் நாட்டின் வளர்ச்சி விகிதம் மேலும் சரியும் என்று தெரிகிறது.
எல் நினோ ஏற்படும்போதெல்லாம் இந்தியாவில் 70 சதவீதம் அளவுக்கு மழை குறைந்தது. 2002 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் எல் நினோவின் தாக்கத்தை இந்தியா சந்தித்தது.
பருவ மழை பெய்யாவிட்டால் நாட்டில் 65 சதவீத அளவுக்கு விவாசயம் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications