பதவியை நீட்டிக்கும் எண்ணம் ராஜபக்சேவிடம் இல்லை - தேர்தலை சந்திப்பார்: இலங்கை

Subscribe to Oneindia Tamil

Rajapakse
கொழும்பு: அதிபர் ராஜபக்சே தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரா கட்சிக்கு மக்களின் தீர்ப்பு மீது முழு நம்பிக்கை உள்ளது. எனவே திட்டமிட்டபடி அதிபர் தேர்தல் நடைபெறும். தேர்தலை சந்திக்காமலேயே தனது பதவியை நீட்டித்துக் கொள்ளும் திட்டம் அதிபரிடம் இல்லை என்று ராஜபக்சே கட்சி அமைச்சரான அனுரா பிரியதர்ஷனா யாபா தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றியை சாக்கிட்டு, தனது அதிபர் பதவியை தேர்தலை சந்திக்காமலேயே நீட்டித்துக் கொள்ள ராஜபக்சே திட்டமிட்டு வருவதாகவும், ராணுவ ஆட்சியைப் போல நடத்தத் திட்டமிட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகின.

இதை யாபா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மக்கள் தீர்ப்பின் மீது அதிபருக்கு முழு நம்பிக்கை உள்ளது. மக்களின் உரிமைகளை அவர் முழுமையாக மதிக்கிறார். எனவே திட்டமிட்ட காலத்திற்குப் பின்னரும் பதவியில் நீடிக்கும் முயற்சியில் அவர் ஈடுபடவில்லை. தேர்தலை சந்திக்காமலேயே பதவியில் நீடிக்கும் விருப்பமும் அவரிடம் இல்லை.

மக்களின் முழு அபிமானத்தைப் பெற்றுள்ளார் ராஜபக்சே. ஜனநாயக அரசின் மீதும், ஜனநாயக நெறிமுறைகள் மீதும் முழு நம்பிக்கை கொண்டவர் அவர். ஜனநாயகத்தை தழைக்கச் செய்யும் போரில் வெற்றி பெற்றவர் அவர்.

எனவே பொருத்தமான நேரத்தில் மீண்டும் தேர்தலை சந்திக்க அவர் தயாராகவே இருக்கிறார்.

அனேகமாக நவம்பர் 19ம் தேதி அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பை ராஜபக்சே வெளியிடலாம். அல்லது அவரது பதவிக்காலம் முடிவடையும் 2011ம் ஆண்டு தேர்தல் நடைபெறலாம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+