சொன்னதை செய்வார் முதல்வர்-தமிழரசி
திருவேங்கடம்: முதல் கருணாநிதி சட்டசபை தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். அவர் சொன்னதை செய்வார் என தமிழக ஆதி திராவிட மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சர் தமிழரசி தெரிவித்துள்ளார்.
சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூர் தேரடி திடலில் இலவச கலர் டிவி மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு நெல்லை கலெக்டர் ஜெயராமன் தலைமை வகித்தார். தென்காசி எம்பி லிங்கம் முன்னிலை வகித்து பேசினார். கரிவலம்வந்தநல்லூர் பஞ் தலைவர் பால்ராஜ் வரவேற்றார்.
விழாவில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சர் தமிழரசி இலவச கலர் டிவி மற்றும் முவலுர் ராமமிர்தம் அம்மையார் பெண்கள் திருமண உதவி, குறிஞ்சி, முல்லை, சத்யா மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு பொருளாதார கடன்கள், உள்ளிட்ட பல்வேறு அரசு நலதிட்ட உதவிகளையும் வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில்,
கடந்த சட்டசபை தேர்தலில் முதல்வர் கருணாநிதி கொடுத்த வாக்குறுதியில் ஒன்றுதான் இந்த இலவச கலர் டிவி வழங்குதல். கிராமப்புற பெண்கள் நாட்டு நடப்பு மற்றும் பகுத்தறிவு கருத்துகளை தெரிந்து கொள்வதற்காகதான் அவர் இலவச கலர் டிவி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார்.
யார் நன்மை செய்கிறார்கள் என்பதை எண்ணி பார்க்க வேண்டும். விவசாயிகளுக்கு பயிர் கடன் வட்டி அறவே இல்லை என தள்ளுபடி செய்தவர் முதல்வர். அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவார். இப்பகுதியில் 508 முதியோர்களுக்கு மாதம் ரூ. 400 முதியோர் உதவி தொகை வழங்கப்படுகிறது என்றார் தமிழரசி.
-
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
கடவுளே.. பும்ராவே.. வான்கடே மைதானத்தில் பிசிசிஐ சிலை வைக்கணும்.. தெறிக்கும் ரசிகர்களின் மீம்ஸ்! -
அவரு மட்டும் வரல.. அவங்களையும் கூட்டிட்டு வந்திருக்காரு! விஜய் செயலால் டென்ஷனான தவெகவினர்! -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
இனிமேல் சர்ச்சில் பேசாதப்பா.. விஜய் - திரிஷா செயலால்.. கோபம் அடைந்த உறவுகள்? பரபரப்பு போஸ்ட்! -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர்












Click it and Unblock the Notifications