குண்டுகள் வீசி திமுக ஊராட்சி தலைவர் கொலை

ஆரணியை அடுத்த மருசூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர் திமுகவைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி. இவர் நேற்று சென்னையில் சட்டசபை நிகழ்ச்சியை பார்த்து விட்டு இரவு 9.30 மணிக்கு ஊர் திரும்பினார். இரவு 11.30 மணி வரை ஊர் பஞ்சாயத்தில் கலந்து கொண்டார். பின்னர் வீட்டுக்கு சென்றார்.
நள்ளிரவு 1 மணியளவில் சுந்தரமூர்த்தி படுத்திருந்த அறையில் பயங்கர வெடிச் சத்தம் சத்தம் கேட்டது. பக்கத்து அறையில் குழந்தைகளுடன் படுத்திருந்த அவரது மனைவி திடுக்கிட்டு எழுந்து கணவரின் அறைக்கு ஓடினார். அப்போது அடுத்தடுத்து மேலும் இரு குண்டுகளும் வெடித்தன.
சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினரும் ஓடி வந்தனர். புகை மண்டலமாகக் காணப்பட்ட அந்த அறையில் சுந்தரமூர்த்தி கருகிப் போய் பலியாகிக் கிடந்தார். அந்த அறையே சிதறி சின்னாபின்னாவாகிவிட்டது.
சம்பவம் குறித்து அறிந்த வேலூர் சரக டி.ஐ.ஜி. செந்தாமரை கண்ணன், மாவட்ட எஸ்பி பன்னீர்செல்வம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் பிரிவினர் ஆகியோரும் தடயங்களை சேகரித்தனர். வீட்டின் ஜன்னல் வழியாக யாராவது நாட்டு வெடிகுண்டுகளை வீசியிருக்கலாம், அல்லது ஏற்கனவே டைமருடன் கூடிய குண்டுகளை வீட்டுக்குள் வைத்துவிட்டுப் போயிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!











Click it and Unblock the Notifications