எம்.எஸ்.சி. நர்சிங் கவுன்சிலிங்கில் பெரும் குழப்பம்
சென்னை: எம்.எஸ்.சி நர்சிங் படிப்புக்கான கவுன்சிலிங்கில் பெரும் குழப்பம் ஏற்பட்டதால் அது ரத்து செய்யப்பட்டது.
தமிழகத்தில் எம்.எஸ்.சி. நர்சிங் படிப்பு ஒரு அரசு நர்சிங் கல்லூரியிலும், 17 சுய நிதிக் கல்லூரிகளிலும் உள்ளது. தமிழக அரசுக் கல்லூரியில் 22 இடங்கள் உள்ளன. தனியார் கல்லூரிகளில் 126 இடங்கள் உள்ளன.
இவற்றுக்கான நர்சிங் மற்றும் எம்.பார்ம், எம்.பி.எட் ஆகியவற்றுக்கான கவுன்சிலிங் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நேற்று காலை தொடங்கியது.
முதலில் 148 இடங்களுக்கான நர்சிங் கவுன்சிலிங் தொடங்கியது. அப்போது சாதி வாரியான இட ஒதுக்கீடு பட்டியல் ஒட்டப்படவில்லை, கவுன்சிலிங்குக்கு வந்தவர்களுக்கு எந்தவித வசதியும் தரப்படவில்லை என்று பெற்றோர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த நிலையில், 126 பேருக்கு மட்டுமே ஒதுக்கீடு என்று செய்தி வந்தது.
இதனால் பெற்றோர்கள் கொந்தளித்தனர். அப்படியானால் மற்ற 22 பேரின் கதி என்ன என்று கேட்டு அவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அதிகாரிகளை அறையில் பூட்டி போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.
இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து பூட்டப்பட்டவர்களை மீட்டனர். மாணவ, மாணவியர், பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் எந்தவித சமாதானமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் நர்சிங் கவுன்சிலிங் ரத்து செய்யப்படுவதாகவும், வேறொரு நாளில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications