13 வயது மாணவி-ராணுவ வீரர் திருமணம்!-எதிர்த்து வழக்கு
மதுரை: 13 வயதே ஆகும் பள்ளி மாணவியை 36 வயதாகும் ராணுவ வீரருக்குத் திருமணம் செய்து வைப்பதைத் தடுக்கக் கோரி அந்த சிறுமியின் சித்தப்பா மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மதுரை மாவ்டடம் பிரவியம்பட்டியைச் சேர்ந்தவர் ஹரிச்சந்திரன். மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இவர் தாக்கல் செய்துள்ள மனு விவரம்..
அதிமுக கிளைச் செயலாளரான எனது சகோதரர் ரவிச்சந்திரனின் மகள் பானு. 13 வயதாகும் இவர், கருமாத்தூர் புனித கிளாரட் மேல்நிலைப்பள்ளியில் 9-வது வகுப்பு படித்து வருகிறார்.
ஒச்சாத்தேவர் என்பவர் ராணுவ வீரராவார். இவருக்கு வயது 36 ஆகிறது. இவரிடம், எனது சகோதரர் பெருமளவில் கடன் வாங்கியிருந்தார். அதிக வட்டிக்கு வாங்கிய அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை.
இந்த நிலையில் எனது சகோதரரின் நிலையைப் பயன்படுத்திக் கொண்டு ஒச்சாத்தேவர், எனது அண்ணன் மகள் பானுவை தனக்கு கல்யாணம் செய்து தருமாறு நெருக்கியுள்ளார். இதை மறுக்க முடியாமல் எனது அண்ணனும் ஏற்றுக் கொண்டுள்ளார்.
இதை நாங்கள் கண்டித்துக் கேட்டபோது, ரவிச்சந்திரன் அதை கேட்காமல், கல்யாணத்தை முடிவு செய்து விட்டார். பத்திரிக்கை அடித்தும் விட்டனர்.
இந்தத் திருமணம், குழந்தைகள் திருமண தடைச் சட்டத்துக்கு எதிரானது. எனவே இந்தத் திருமணத்தை தடுத்து நிறுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இதுகுறித்து விசாரிக்க பள்ளி மாணவி பானுவையும், அவருடைய பெற்றோரையும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு கூறி உத்தரவிட்டார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications