தூத்துக்குடி மின் நிலையம்-கூடுதல் மின்சாரம் கேட்கும் தமிழகம்
சென்னை: தூத்துக்குடியில் என்எல்சி நிறுவனம் அமைக்கவுள்ள மின் நிலையத்திலிருந்து தமிழகத்திற்கு அதிக அளவிலான மின்சாரம் தர வேண்டும் என தமிழகம் கோரியுள்ளது.
இதே நிலைதான் குஜராத்திலும் என்எல்சிக்கு ஏற்பட்டது. அங்குள்ள வாலியா என்ற இடத்தி்ல 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் மின் நிலையத்தை அமைக்க திட்டமிட்டது என்எல்சி. குஜராத் மாநில அரசுடன் இணைந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதாக இருந்தது.
ஆனால் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் குஜராத்துக்கே தர வேண்டும் என அம்மாநில அரசு கூறியதால், இந்தத் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது என்எல்சி.
தற்போது தமிழகத்திலும், தமிழக அரசுடன் இணைந்து தூத்துக்குடியில் மின் நிலையம் அமைக்கிறது என்எல்சி. இந்த நிலையில்தான் தமிழகத்திற்கு அதிக அளவிலான மின்சாரத்தைத் தர வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது.
தூத்துக்குடியில், மாநில மின்வாரியத்துடன் இணைந்து ரூ. 3,354 கோடி மதிப்பீட்டில் நிலக்கரியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நிலையத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது என்எல்சி.
இந்தக் கூட்டுத் திட்டத்தின் மூலம் 1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும். இந்த்க கூட்டுத் திட்டத்தில் தமிழக அரசின் பங்கு 11 சதவீதமாகும்.
இங்கு தயாரிக்கப்படும் மின்சாரத்தில் 75 சதவீதத்தை அதாவது 750 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்திற்கே தர வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளதாம். ஆனால் தமிழகத்திற்கு 55 சதவீதமே அதாவது 550 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தருவதாக என்எல்சி கூறியது. அதிலும் கூட தற்போது 494 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தமிழகத்திற்குக் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
குஜராத்தைப் போல அதிரடியாக அத்தனையும் எங்களுக்கே என்று தமிழக அரசு கேட்கவில்லை. மாறாக அதிக அளவிலான மின்சாரத்தை மட்டுமே கேட்கிறது என்று மின்வாரிய தரப்பில் கூறுகிறார்கள்.
அதேசமயம், ராஜஸ்தானில் என்எல்சி நிறுவனம் 250 மெகாவாட் மின் திறன் கொண்ட நிலையம் ஒன்றை உருவாக்கி வருகிறது. இந்த மின்சாரம் முழுவதையும் ராஜஸ்தானுக்கே என்எல்சி வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications