விசா மோசடி- கிரிக்கெட் வீரர், பெண் கைது
சென்னை: கணவன், மனைவி என்று கூறி போலி ஆவணங்களைக் காட்டி அமெரிக்கா செல்ல விசா பெற முயன்றதாக குஜராத்தைச் சேர்ந்த ரஞ்சி கிரிக்கெட் வீரர், ஒரு பெண் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
குஜராத் மாநிலம், அகமதாபாத் அருகேயுள்ள வதோதராவைச் சேர்ந்தவர் இம்ரான் குலாம் பாய் படேல். 27 வயதான இவர் அம்மாநில ரஞ்சி கிரிக்கெட்டில் ஆடி வரும் வீரர் ஆவார்.
இவர் அமெரிக்கா செல்ல விசா கோரி புதுச்சேரி முகவரியைக் கொடுத்து விண்ணப்பித்திருந்தார். இவருடன் சோனல் பென் என்ற பெண் மனைவி என்று கூறி விண்ணப்பித்திருந்தார்.
நேற்று முன்தினம் காலையில் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலகத்துக்கு விசாரணைக்காக படேலும், சோனலும் வந்தனர்.
நான் சித்த வைத்தியர், அமெரிக்காவை சுற்றிப் பார்க்க மனைவியுடன் செல்வதாக இம்ரான் தெரிவித்தார்.
ஆனால் இம்ரான் மற்றும் சோனலின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அதிகாரிகள் இருவரையும் தனித் தனியாக விசாரித்தனர். அப்போது சோனல் உண்மையை உளறிக் கொட்டி விட்டார்.
தனக்கு கல்யாணமே ஆகவில்லை என்றும், அமெரிக்காவில் வீட்டு வேலை பார்ப்பதற்காக இம்ரானின் மனைவி என்ற பெயரில் விசாவுக்கு விண்ணப்பித்ததாகவும் அவர் கூறினார்.
இதையடுத்து இருவரையும் போலீஸாரிடம் ஒப்படைத்தனர் தூதரக அதிகாரிகள். போலீஸார் விசாரணை நடத்தி, அவர்களுக்கு போலி ஆவணம் மூலம் விசா விண்ணப்பத்தை சமர்ப்பித்த குஜராத் மாநிலத்தை சேர்ந்த அல்டாப் இஸ்மாயில் (42) என்ற ஏஜென்ட்டையும் கைது செய்தனர்.
அமெரிக்காவுக்கு இவர்கள் இருவரையும் அனுப்ப ரூ. 2ல லட்சம் கமிஷன் தொகையையும் வாங்கியிருந்தாராம் இஸ்மாயில்.
சோனல் 9ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். வறுமையி்ல வாடி வரும் அவர் அமெரிக்கா சென்று வீட்டு வேலை செய்து பிழைப்பதற்காக இம்ரானின் மனைவியாக நடிக்க ஒப்புக் கொண்டாராம்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications