பழனி-13 நாள் உண்டியல் வசூல் ரூ.56 லட்சம்
பழனி: பழனி முத்துக்குமார சுவாமி திருக்கோயில் உண்டியலில் கடந்த 13ம் நாட்களில் மட்டும் ரூ. 56 லட்சம் காணிக்கையாக கிடைத்துள்ளது.
முருகனின் ஆறுபடை வீடுகளில் மூன்றாவது வீடு பழனி. இங்கு வீற்றிருக்கும் முத்துக்குமார சுவாமியை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர்.
இந்நிலையில் நேற்று பழனி கோயில் இணை ஆணையர் தி.ராசமாணிக்கம், துணை ஆணையர் மங்கையற்கரசி, உதவி ஆணையர் நடராஜன், அறநிலையத்துறை மதுரை மண்டல துணை ஆணையர் கோவிந்தராம் ஆகியோர் முன்னிலையில் நேற்று உண்டியல் உடைக்கப்பட்டு, மலைகோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது.
இதில் ரொக்கம் ரூ. 55 லட்சத்து 54 ஆயிரம் பணமும், 715 கிராம் தங்கமும், 4 ஆயிரத்து 727 கிராம் வெள்ளியும் மற்றும் அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளின் கரன்சிகள் 223ம் இருந்தன.
முருகனுக்கு மொபைல் காணிக்கை...
அதே போன்று, தங்கத்திலான வேல், மாங்கல்யம், மோதிரம், செயின், வெள்ளி வேல், வீடு, ஆள் ரூபம், உடலின் பாகங்கள், பித்தளை வேல், பாத்திரங்கள் மற்றும் கைக்கடிகாரம், பரிவட்டங்கள், ஏலக்காய் மாலை போன்றவைகள் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.
இவைகளுடன் பக்தர் ஒருவர் முருகனுக்கு மொபைல் போன் ஒன்றையும் காணிக்கையாக கொடுத்துள்ளார்.
அப்போது, கடந்த 13 நாட்களில் மட்டும் ரூ. 56 லட்சம் கிடைத்துள்ளது தெரிய வந்தது. கடந்த ஆண்டு, இதே காலத்தில் கிடைத்த உண்டியல் வசூலை விட ரூ. 15 லட்சம் அதிகம் என்று கோயில் அதிகாரிகள் கூறினர்.
-
இந்தியாவில் தங்கம் வாங்க ஆள் இல்லை! 70% சரிந்த வியாபாரம்.. பின்னணியில் அதிர வைக்கும் காரணம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications