மாவட்ட நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை
சென்னை: கட்சியின் வளர்ச்சி பணிகள் மற்றும் எதிர்கால திட்டம் குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று சென்னையில் ஆலோசனை நடத்தினார்.
நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட தேமுதிக 10 சதவீதத்துக்கும் சற்று அதிக ஓட்டு வாங்கி, மற்ற கட்சிகளை ஆச்சர்யத்தில் மூழ்க செய்தது. மேலும், சுமார் 25 தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்கியது. ஆனால், ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.
இதையடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சியை பலப்படுத்தும் அடுத்தக்கட்ட பணிகளில் இறங்கியுள்ளார். அவர் மாவட்ட நிர்வாகிகளுடன் கட்சியின் எதிர்கால திட்டம் குறித்து கலந்து பேசி வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை சுமார் 11.30 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் விஜயகாந்த், மகளிர் அணி தலைவி பிரேமலதா விஜயகாந்த், அவைத் தலைவர் பன்ருட்டி ராமச்சந்திரன், கட்சியின் மாநில மகளிரணி தலைவி ரெஜினா பாப்பா ஆகியோர் கட்சி நிர்வாகிகளை சந்தித்தனர்.
இவர்கள் கட்சியின் 10 மாவட்டங்களை சேர்ந்த மகளிர் அணி செயலாளர்கள், நகராட்சி. பேரூராட்சி மகளிர் அணி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினர். பின்னர் இன்று மாலையில் இந்த 10 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளிடம் கலந்தாலோசிக்க இருக்கின்றனர்.
மேலும், அவர் இது போன்ற ஆலோசனை கூட்டங்களை தமிழ்நாடு முழுவதும் நடத்த இருக்கிறார். நாளை ஜூன் 25ம் தேதி கோயம்புத்தூரிலும், 26ம் தேதி மதுரையிலும், 27ம் தேதி தஞ்சாவூரிலும், 28ம் தேதி விழுப்புரத்திலும் கூட்டங்கள் நடைபெற இருக்கிறது.
-
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications