வட கொரிய அணு ஆயுதங்களை எதிர்கொள்ள தயார்-ஒபாமா
வாஷிங்டன்: வட கொரியாவின் எந்தவித சவாலையும் சந்திக்க அமெரிக்கா தயார். ஹவாய் தீவை நோக்கி அது ஏவப் போவதாக கூறப்படும் ஏவுகணையை சந்திக்க அமெரிக்க படைகள் தயாராக உள்ளதாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கூறியுள்ளார்.
அமெரிக்க சுதந்திர தினமான ஜூலை 4ம் தேதி ஹவாய் தீவை நோக்கி கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கக் கூடிய வல்லமை படைத்த ஏவுகணையை ஏவ வட கொரியா திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து சிபிஎஸ் நிறுவனத்திற்கு ஒபாமா அளித்த பேட்டியின்போது, அமெரிக்க அரசும், அமெரிக்க ராணுவமும், எத்தகைய சூழ்நிலையையும் சமாளிக்கும் வல்லமை படைத்தவை. தயார் நிலையில் உள்ளவை.
எத்தகைய விளைவையும் சந்திக்கும் வகையில் நமது ராணுவம் ஆயத்த நிலையில் உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
அமெரிக்க மக்களுக்கு நான் அளிக்க விரும்பும் உறுதி என்னவென்றால், என்ன நடந்தாலும் அதை சமாளித்து உங்களைக் காப்போம். அதில் இந்த அரசும், ராணுவமும் உறுதியாக இருக்கிறது என்றார் ஒபாமா.
இதற்கிடையே, அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில் அமெரிக்காவுக்கு வட கொரியாதான் மிகப் பெரிய மிரட்டலாக இருக்கிறது என 51 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவுக்கான மிரட்டல் நாடுகளாக அவர்கள் கருதும் பட்டியலில் ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் உள்ளன.
இதற்கிடையே, ஹவாய் தீவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் கூறியுள்ளார்.
அமெரிக்க பிராந்தியத்திற்குள் யாரையும் ஊடுறுவ அனுமதிக்க மாட்டோம். அதற்காகவே ராணுவம் தயார்படுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
ஹவாய் தீவில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ள அமெரிக்க ராணுவம், அங்கு ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகளையும் நிறுத்தி வைத்துள்ளது. அலாஸ்கா மாகாணத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானிடம் உள்ள அணு ஆயுதங்கள் கிடைத்தால் அதை அமெரிக்காவுக்கு எதிராக பயன்படுத்துவோம் என தலிபான் தீவிரவாதிகள் மிரட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
-
LPG சிலிண்டர் தட்டுப்பாடு.. சென்னையில் நிலைமை எப்படி இருக்கு? ஹோட்டல்கள் மூடப்படுமா? பின்னணி -
LPG சிலிண்டர் தட்டுப்பாடு டீசர்தான்.. மெயின் பிரச்சனையே இனிதான்.. கவனமா இருங்க.. வரப்போகும் சிக்கல் -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
காலியான வீதிகள்.. விழி பிதுங்கும் தொழிலதிபர்கள்.. ஆள் இல்லாத "அமீரகம்".. கோஸ்ட் டவுன் துபாய்! -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
ஈரானிடம் சிக்கிய அமெரிக்கா! அலறும் இஸ்ரேல்! ட்ரம்புக்கு வந்த அவசர போன்! மிடில் ஈஸ்ட் ‘திக் திக்’ -
30 வருட அமெரிக்க ஆதிக்கத்தை.. உடைத்த ஈரான்.. தயாராக இருங்க.. உலகம் பெரிய மாற்றத்தைச் சந்திக்குது -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா! -
"ஈரான் போர் சீக்கிரமே முடிந்துவிடும்.." டிரம்ப் சொன்ன வார்த்தை.. ஆனால் அடுத்த வரியிலேயே ட்விஸ்ட் -
எதிரிகள் தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க.. அந்தர் பல்டி அடித்த ஈரான் அதிபர்! அண்டை நாடுகளுக்கு வார்னிங் -
ஸ்விஸ் வங்கியில் பணம், லண்டனில் பல ஆயிரம் கோடியில் வீடு! ஈரான் புதிய தலைவர் சொத்து மதிப்பு எவ்வளவு? -
“ஒரு டான்ஸ் ஆடியது குத்தமா.. அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்படும் இந்தியர்.. என்ன இப்படி ஆகிடுச்சு












Click it and Unblock the Notifications