ஜூலை 26ல் 'சைமா' பவள விழா-தயாநிதி பங்கேற்பு
கோவை: ஜூலை 26ல் நடைபெற உள்ள தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க (சைமா) பவள விழாவில் மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் பங்கேற்கிறார்.
இது குறித்து சைமா தலைவர் துளசிதரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சர்வதேச பொருளாதார நெருக்கடியில் பல்வேறு இடர்பாடுகளைச் ஜவுளித் துறை சந்தித்து வருகின்றது.
அவற்றில் இருந்து விடுபடுவதற்கும், சவால்களை எதிர்கொள்வதற்கும் புதிய உத்திகளைப் பின்பற்றுவதற்கும் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) சார்பில் கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் ஜூலை 27ம் தேதி வரை சர்வ தேச ஜவுளி கண்காட்சி நடைபெற உள்ளது .
நவீன ஜவுளி இயந்திரங்கள், உதிரி பாகங்கள், ஜவுளிப் பொருள்களுக்கான போக்குவரத்து வசதிகள், சந்தை வாய்ப்புகள் ஆகியன குறித்து உற்பத்தியாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இக் கண்காட்சியில் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
மேலும், இத் துறையின் தற்போதைய முன்னேற்றங்கள், புதிய திட்டங்கள், தேவைகள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான வாய்ப்புகள் குறித்த அரங்குகள் கண்காட்சியில் இடம் பெறுகின்றது.
நாடு முழுவதும் இருந்து 30,000 பேர் இக் கண்காட்சியில் பங்கேற்பர் என எதிர்பார்க்கபப்டுகின்றது.
இந்த கண்காட்சியின் ஒரு பகுதியாக ஜூலை 26ல் சைமாவின் பவளவிழா கொண்டாடப்படுகிறது. இதில் மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications