தூத்துக்குடி அருகே 473 ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே பதுக்கி வைக்கப்பட்ட 473 ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி அருகே உள்ளது மஞ்சூர்காயல். இந்தப் பகுதியில் உள்ள ஒரு ரைஸ் மில்லில் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்து கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
இதனையடுத்து, ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்படுவதாக கூறப்படும் ரைஸ் மில்லை போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் போலீசார் அந்த ரைஸ் மில்லில் திடீர் சோதனை நடத்தினர். சோதனையில் அங்கு 473 ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து பதுக்கி வைக்கப்படிருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இதனை கேள்விப்பட்ட ரைஸ் மில் உரிமையாளர் தலைமறைவாகிவிட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications