பள்ளி வேன்-ஆட்டோ டிரைவர்களுக்கு எச்சரிக்கை
சென்னை: ஆட்டோ மற்றும் வேன்களில் அளவுக்கு அதிகமான குழந்தைகளை ஏற்றிச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், மீறும் ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆட்டோ, டெம்போ வேன்களில் அதிக ஆட்களை ஏற்றி செல்வதை சென்னை மாநகரில் காண முடிகிறது. குறிப்பாக பள்ளிகளுக்கு இந்த வண்டிகளில் மாணவர்களை அடைத்துக் கொண்டு செல்வது பெற்றோர்களுக்கு பெரும் கவலையை அளித்துள்ளது. விபத்துக்கள் ஏற்படுவதற்கும் இது வழி வகுக்கிறது.
ஆட்டோக்களில் 5 பேரும், வேன்களில் 18 பேரும் ஏற்றி செல்ல மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆயினும், இந்த விதிமுறை பெரும்பாலும் பின்பற்றபடுவதில்லை. மதிப்புமிக்க மனித உயிர்களை குறிப்பாக குழந்தைகளை காப்பாற்றுவதற்காக இந்த பழக்கத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவது மிகவும் அவசியம்.
எனவே ஆட்டோ மற்றும் வேன் ஓட்டுநர்கள் தங்கள் வண்டிகளில் அளவிற்கு அதிகமாக ஆட்களை ஏற்றுவதை தவிர்க்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள்.
குறிப்பிட்ட அளவு நபர்களை ஏற்ற வேண்டும் என்ற மோட்டார் வாகன விதிகளை அவர்கள் தவறாது கடைபிடிக்க வேண்டும். விதிகளை மீறுவோர் மீது ஜூலை 1ம் தேதி முதல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த விஷயத்தில் அனைத்து பள்ளி முதல்வர்களும், பெற்றோர்களும் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
பொது இடத்தில் புகை பிடித்தால்..
இந் நிலையில் இன்று உலக போதை எதிர்ப்பு தினத்தையொட்டி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சென்னையில் மனித சங்கிலி நடத்தினர். மாணவ- மாணவிகள் பங்கேற்ற இந்த மனித சங்கிலி மெரீனா கடற்கரையில் உள்ள காந்தி சிலையில் இருந்து சாந்தோம் சர்ச் வரை நடந்தது.
இதைத் தொடங்கி வைத்த டி.ஜி.பி. ஜெயின் நிருபர்களிடம் பேசுகையில்,
பொது இடங்களில் புகை பிடிப்பதை தடுப்பதற்கான சட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது. இது கடுமையாக அமலாக்கப்படும். பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications