அரசு மருத்துவமனைகளில் வருமான வரம்பின்றி அனைவருக்கும் இலவச சிகிச்சை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு மருத்துவமனைகளில் வருமான வரம்பு ஏதும் இன்றி அனைவருக்கும் இனி இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் கூறினார்.

சட்டசபையில் சுகாதாரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து அமைச்சர் கூறியதாவது:

- சென்னை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் ரூ.400 கோடி செலவில் மத்திய அரசின் உதவியுடன் நவீன வசதிகளுடன் மிகப் பெரிய ரத்த வங்கி அமைக்கப்படும்.

- சென்னை அரசு பொது மருத்துவமனையின் விரிவாக்கத்துக்காக மத்திய சிறைச்சாலைக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் ரூ.70 கோடி செலவில் மிகப்பெரிய வெளி நோயாளிகள் வளாகம் கட்டப்படும்.

- 101 மேம்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரத்த சேமிப்பு மையங்கள் ரூ.4.37 கோடி செலவில் அமைக்கப்படும்.

- சென்னை கீழ்பாக்கம் மனநல மருத்துவமனை ரூ.30 கோடி செலவில் தேசிய மனநல சுகாதார திட்டத்தின் உதவியுடன் சிறப்பு மையமாக அமைக்கப்படும்.

- அரசு மருத்துவமனைகளில் வருமான வரம்பு ஏதும் இன்றி அனைவருக்கும் இனி இலவச சிகிச்சை அளிக்கப்படும்

- நடப்பு ஆண்டில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.5 கோடி செலவில் புதிய எம்.ஆர்.ஐ. கருவியும், சென்னை அரசு பொது மருத்துவமனையில் ரூ.4 கோடி செலவில் புதிய கேத் லேப் (கத்திட்டர் லேப்), கருவியும் நிறுவப்படும்.

- இணைய தள வழி சுகாதாரம் மற்றும் மருத்துவ தகவல் மேலாண்மை திட்டம் தற்போது தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், சோளிங்கர், குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் ஆகிய 5 மருத்துவமனைகளில் முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டம் ரூ.8 கோடி செலவில் இவ்வாண்டு தருமபுரி, கிருஷ்ணகிரி, தேனி, கன்னியாகுமரி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் 43 அரசு மருத்துவமனைகளில் செயல்படுத்தப்படும்.

எஞ்சியுள்ள 222 அரசு மருத்துவமனைகளில் உலக வங்கி நிதி உதவி பெற்று படிப்படியாக செயல்படுத்தப்படும்.

- ரூ.3.41 கோடியில் சென்னையிலுள்ள எழும்பூர், தாய் சேய் நல மருத்துவமனை, குழந்தைகள் நல மருத்துவமனை, கஸ்தூரிபாய் காந்தி தாய்-சேய் நல மருத்துவமனை, ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம் ஆகிய 4 மருத்துவமனைகளிலும் கம்ப்யூட்டர் வசதிகள் ஏற்படுத்தப்படும்.

எல்லா மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளையும் இணைத்து எல்லா நோயாளிகளுக்கும் சிறந்த சிகிச்சை அளிப்பதற்காக ரூ.2.27 கோடி செலவில் டெலிமெடிசின் வசதியும் எற்படுத்தப்படும்.

- செங்கல்பட்டு, தூத்துக்குடி, திருச்சி, நாகர்கோவில், வேலூர், தேனி மற்றும் சேலம் ஆகிய 7 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள ரத்த வங்கிகள் ரூ.1.26 கோடி செலவில் ரத்தப் பகுப்பாய்வு மையங்களாக மாற்றப்படும்.

- ரூ.8 கோடியில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டம், வட்டம் மற்றும் வட்டம் சாரா மருத்துவ மனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவ கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும்.

- சென்னையில் கட்டப்பட்டுவரும் சென்னை அரசினர் அறிஞர் அண்ணா சித்த மருத்துவ கல்லூரிக்கு ரூ.1.4 கோடியில் அதிநவீன உபகரணங்கள் வழங்கப்படும்.

- ஒருங்கிணைந்த மருந்தாளுநர் மற்றும் நர்சிங் பட்டயப்படிப்பின் தரத்தை உயர்த்த சென்னை அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவ கல்லூரி மற்றும் பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரிகளில் ரூ.3.5 கோடி செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.

- முக்கிய விருந்தினர்கள் வருகையின்போது பயன்படுத்த ரூ.17 லட்சத்தில் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு விஐபி ஆம்புலன்ஸ் வழங்கப்படும்.

- சென்னை, மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் வசதிக்காக மூன்று பேருந்துகள் ரூ.54 லட்சத்தில் வழங்கப்படும்.

- சேலம், தூத்துக்குடி மற்றும் திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களின் உபயோகத்திற்காக ரூ.27 லட்சம் செலவில் மூன்று கார்கள் வழங்கப்படும்.

- தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ. 9 கோடியில் அல்ட்ரா சோனோகிராம், செமி ஆட்டோ அனலைசர் போன்ற நவீன மருத்துவக் கருவிகள் வழங்கப்படும்.

- காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், திருப்பூர், உதகமண்டலம், திண்டுக்கல், புதுக்கோட்டை மற்றும் கும்பகோணம் ஆகிய 8 அரசு தலைமை மருத்துவமனைகளுக்கு ரூ.2.4 கோடியில் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவிகள் நிறுவப்படும்.

- 15 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளைத் தாக்கும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோயை கட்டுபடுத்த திருவண்ணாமலை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ரூ.1.17 கோடி செலவில் தடுப்பூசிகள் போடப்படும்.

- காது கேளாமை குறைபாடுகளை களையும் திட்டம் தற்போது வேலூர், விழுப்புரம், தஞ்சாவூர் மாவட்டங்களில் முன்மாதிரி திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் ரூ.10.4 கோடி செலவில் மேலும் 16 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

- ரூ.1.8 கோடியில் இருதய செயலிழப்பு நோயாளிகளுக்கு இருதய துடிப்பை அதிகரிக்க செய்யும் அதி நவீன கருவியான இசிசிபி', சென்னை, மதுரை, கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு வழங்கப்படவுள்ளது.

- அரசின் 6வது ஊதியக் குழு பரிந்துரை அமலாக்கத்தில் டாக்டர்களுக்கு உள்ள சம்பள விகித முரண்பாடுகள் களையப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+