ஸ்பிக் திறக்காவிட்டால் போராட்டம்-நல்லகண்ணு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்பிக் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்பிக் நகரில், மூடப்பட்டுள்ள ஸ்பிக் ஆலையை திறக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயலர் மோகன்ராஜ் தலைமையி்ல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில்,
ஸ்பிக் உர ஆலை கடந்த இரு ஆண்டுகளாக மூடிக்கிடக்கிறது. அதனால், அதன் சார்பு ஆலைகளான டாக், கனநீர் ஆலை போன்றவையும் இயங்காமல் உள்ளன. இதனால் 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையின்றி வாடுகின்றனர்.
ஸ்பிக் ஆலை இயங்காதது தூத்துக்குடியை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்தின் உரத்தேவையை பாதித்துள்ளது. அதை திறக்க பல போராட்டங்கள் நடத்தி வருகின்றோம்.
மத்திய ரசாயான உரத்துறை அமைச்சராக தமிழகத்தை சேர்ந்த ஒருவரே பொறுப்பேற்றுள்ளார். அவர், ஸ்பிக் ஆலையை விரைவில் திறப்பதாக கூறியுள்ளார். ஆனால், அதற்கான அறிகுறி இதுவரை தெரியவில்லை.
ஸ்பிக் ஆலை திறக்க நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றார் நல்லகண்ணு.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications