இன்னும் சுட்டெரிக்கும் வெயில்-என்ன காரணம்?

கோடை காலத்தின் ஆரம்பம் மற்றும் முடிவில் இருந்ததை விட தற்போது வெயில் மிகக் கடுமையாக உள்ளது. பகல் முழுவதும் வெயில் சுட்டெரிக்கிறது. அதேசமயம், மாலையில் பலத்த காற்றும், அவ்வப்போது லேசான மழையும் காணப்படுகிறது.
இந்த இயற்கையின் முரண்பாடான நிலை காரணமாக மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.
பகல் முழுவதும் வெயில் கத்திரி வெயிலைப் போல மிகக் கடுமையாக இருப்பதாலும், அனல் காற்றும் வீசுவதாலும் வீட்டுக்குள்ளும் இருக்க முடியவில்லை. வெளியிலும் தலை காட்ட முடியவில்லை.
தென் மேற்குப் பருவ மழையும் எதிர்பார்த்தது போல இல்லாமல் ஏமாற்றி வருகிறது.
ஏன் இந்த முரண்பாடான நிலை, வெயில் ஏன் இன்னும் சுட்டெரிக்கிறது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் விளக்குகையில், கடல் காற்று தாமதமாக வீசுவதே இதற்கு முக்கிய காரணம். வழக்கமாக காலை பத்தரை மணிக்கு காற்று வீசத் தொடங்கும். அதுதான் இயல்பான நிலை.
ஆனால் தற்போது மாலை 3 மணிக்குப் பிறகுதான் கடல் காற்று வீசுகிறது. எனவேதான் வெயில் கடுமையாக உள்ளதற்கும், அனல் காற்று வீசுவதற்கும் காரணம்.
கடல் காற்றுக்குப் பதில் தரைக்காற்றுதான் தற்போது அதிகம் வீசுகிறது. எனவேதான் வெப்பம் அதிகமாக உள்ளது.
தென் மேற்குப் பருவமழை தற்போது வலுவிழந்துள்ளது. இதுவும் வெப்ப நிலை அதிகரிக்க இன்னொரு காரணம். தற்போது கேரளாவில் லேசான மழைதான் உள்ளது. அங்கு பலத்த மழை பெய்தால், அருகில் உள்ள தேனி, கோவை, கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் வானிலை மாறும், மழையும் கிடைக்கும்.
தற்போதைய நிலவரப்படி பகல் நேரங்களில் சராசரியாக 104 முதல் 105 டிகிரி வரை வெயில் அடிக்கும். இரவு நேரங்களில் ஆங்காங்கே மழை பெய்யும். சூறைக் காற்றும் சில இடங்களில் காணப்படும் என்கிறார்.
சதத்திலிருந்து இறங்காத வெயில்..
நேற்றும் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் வெயில் கொளுத்தியது.
சென்னையில் சராசரியாக 105 டிகிரி வெயில் பதிவானது. அதேபோல மதுரை, புதுச்சேரி, நாகை, வேலூர், திருச்சி, கடலூர் ஆகிய நகரங்களில் 100 டிகிரியைத் தாண்டி வெயில் இருந்தது.
தூத்துக்குடி, நெல்லை, சேலம், கோவை, குமரி மாவட்டங்களிலும் வெயில் ஓரளவு கொளு்தியது.
சென்னை புறநகர்ப் பகுதிகளில் நேற்று பகலில் ஒரு பக்கம் வெயில் கொளுத்திக் கொண்டிருக்க மறுபக்கம் பலத்த காற்றும் வீசியது. மாலையில் சில இடங்களில் லேசான மழை காணப்பட்டது.
-
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications