8 -ம் வகுப்பு மாணவிக்கு திருமணம் - கலெக்டர் அதிரடி - 3 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

பென்னாகரம்: 8 -ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த புது மாப்பிள்ளை மற்றும் மாணவியின் பெற்றோர் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, பென்னாகரம், அரூர் ஆகிய பகுதியில் அதிக அளவில் குழந்தை திருமணங்கள் நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், குழந்தை திருமணத்தை தடுக்க சில மாதங்களாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதன் பயனாக கடந்த மாதம் நடக்க இருந்த நான்கு குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், பென்னாகரம் அடுத்த பூஜைகுண்டு காட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் பாரதி (13). இவர் பென்னாகரம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

இவருக்கும் பென்னாகரம் அண்ணா நகரை சேர்ந்த முருகன் (25) என்பவருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.

2 நாட்களுக்கு முன்பு பென்னாகரம் சிவன் கோவில் திருமண மண்டபத்தில் பாரதிக்கும், முருகனுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்தில் இரு வீட்டாரும் கலந்து கொண்டனர்.

திருமணம் முடிந்து பென்னாகரம் அண்ணாநகரில் உள்ள மாப்பிள்ளை முருகன் வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

குழந்தை திருமணம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் அமுதா இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மாவட்ட கலெக்டர் அமுதா உத்தரவின்படி, தாசில்தார் மல்லிகா, இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் முருகன் வீட்டுக்கு சென்று பாரதி மற்றும் முருகனிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போது, குழந்தை திருமணம் நடந்ததை உறுதி செய்தனர்.

இதனையடுத்து, புது மாப்பிள்ளை முருகன், அவரது தந்தை அய்யாக்குட்டி, மணமகளின் தந்தை ராஜா ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மாவட்ட கலெக்டராக அமுதா பதவியேற்றது முதல் குழந்தை திருமணத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+